உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

131

நன்று என்னும் உரிச்சொல் உணர்த்துங் குறிப்பு :

நன்று என்னும் உரிச்சொல் பெரிது என்னுங் குறிப் புணர்த்தும்.

(எ.டு) "நன்று மரிதுற்றனையாற் பெரும

""

நான்காம் வேற்றுமை உருபேற்கும் பொருள்கள் :

கு' வ்வுருபு, தன்னையேற்ற பெயர்ப் பொருளைக் கோடற் பொருளாகவும் பகைத் தொடர் பொருளாகவும், நட்புத் தொடர் பொருளாகவும், தகுதியுடைப் பொருளாகவும், முதற் காரண காரியப் பொருளாகவும், நிமித்த காரணகாரியப் பொருளாகவும், முறைக்கு இயை பொருளாகவும் வேறு படுத்தும். அவ்வாறு வேறுபட்ட கோடற் பொருண் முதலியன இவ்வுருபின் பொருள்களாம்.

(எ.டு)

இரப்பவர்க்குப் பொன்கொடுத்தான் கோடற் பொருள் பாம்புக்குப் பகை கருடன் - பகைத் தொடர் பொருள் சாத்தனுக்குத் தோழன் கொற்றன் நட்புத் தொடர் பொருள்.

அரசர்க்கு இவ்வணி உரியது தகுதியுடைப் பொருள்

குண்டலத்திற்குப் பொன்

பொருள்

பொன்னனுக்கு மகன் இவன் பொருள்.

நான்காம் வேற்றுமையின் உருபு :

முதற்காரண காரியப்

_

முறைக்கு இயை

நான்காம் வேற்றுமையின் உருபு ‘கு' ஒன்றேயாம். மேலும் குவ் வுருபு நிற்றற்குரிய சில விடங்களில் பொருட்டு, நிமித்தம் என்பதையும் குவ்வுருபின் மேல்

சொல்லுருபுகளாக வரும்.

நிரனிறைப் பொருள் கோள் :

ஆக வென்பதுஞ்

பெயரும் வினையுமாகிய சொற்களையும் அவை கொள்ளும் பெயரும் வினையுமாகிய பயனிலைகளையும் வேறு வேறாக வரிசைப்பட நிறுத்தி, முறையாகவேனும் எதிராகவேனும் இதற்கு இது பயனிலை என்று தோன்றும்படி கூறும் பொருள்கோள் நிரனிறைப் பொருள் கோளாகும்.