உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இளங்குமரனார் தமிழ்வளம்

4

66

(எ-டு) ‘மாசு போகவும் காய்பசி நீங்கவும் கலிபுனல் மூழ்கி அடிசில் கைதொட்டு’

இப்பாடலில்

மாசு போக கலிபுனல் மூழ்குதலும்

காய்பசி நீங்க

""

அடிசில் கை தொடுதலும்

நிரல் நிரையாக வந்துள்ளதை அறியலாம்

நிறமென்னும் பண்பையுணர்த்தும் உரிச் சொற்கள் :

குருவும் கெழுவுமாகிய இரண்டு உரிச் சொற்களும் நிறமென்னும் பண்பையுணர்த்தும்.

(எ-டு) “குரு மணித்தாலி’

""

“செங்கேழ் மென்கொடி

நீட்டலளவையாகு பெயர் :

நீட்டியளக்கின்ற முழம், சாண், கல், ஓசனை, காதம் முதலிய பெயர் அவ்வளவைக் கொண்ட பொருளுக்கு ஆகி வருவது நீட்டலளவை ஆகு பெயராகும்.

(எ.டு)

காதம் நடந்தான் என்றதில் காதம் காதம் என்னும் நீட்டலளவைப் பெயர் அவ்வளவைக் கொண்ட தொலைவிற்கு ஆயிற்று. நீர்வாழ் உயிரிகளுக்கு வழங்கும் ஆண்பாற் பெயர்கள் :

கடல் வாழ் சுறாவின் ஆணினை ஏற்றை என வழங்குவர். நீருள் வாழும் முதலை முதலிய நீர் வாழ் உயிரிகளின் ஆண் பாற் பெயர் போத்து என்பதாகும்.

நுணுக்கம் என்னுங் குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் :

ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய் என்னும் உரிச்சொற்கள்

நுணுக்கம் என்னுங் குறிப்பை உணர்த்தும்.

""

(எ.டு) “வேனிலுழந்த வறிதுயங் கோய் களிறு’ "பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை “நிழத்த யானை மேய்புலம் படர’

""

“கயலற லெதிரக் கடும்புனல் சாஅய்

""