உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ்வளம்

4. இது செய்வாயா?

5. இது செய்வாயா?

6. இது செய்வாயா?

7. இது செய்வாயா?

நீ செய் ஏவல்

செய்யேனோ

4

வினாவெதிர் வினாதல்

உடம்புநொந்தது

உற்றதுரைத்தல்

உடம்புநோம் உறுவது கூறல்.

8. இது செய்வாயா?

விட்டவாகு பெயர் :

மற்றையது செய்வேன்

இனமொழி.

அவ்வூர் வந்தது என்ற விடத்து ஊர் என்பது, இடமாகிய தன் பொருளை விட்டுத் தன்னிடத்திலுள்ள மனிதரை யுணர்த்தலால் விட்டவாகுபெயர்.

விதியில்லாவிகாரங்கள் :

விதியின்றி விகாரப்பட்டு வருவனவுஞ்சிலவுள. அவை, மருவி வழங்குதல், ஒத்து நடத்தல், தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், நிலை மாறுதல் என எழுவகைப்படும். இவைகளுள், மருவி வழங்குத லொன்று மாத்திரம் தொடர் மொழியிலும், மற்றவை பெரும்பாலுந் தனி மொழியிலும் வரும்.

விளியடையாத பெயர்கள் :

நுவ்வுடன் எ, ஏ, யா என்னும் மூன்று முதல் வினாவையும் அ, இ என்னும் மூன்று சுட்டையும் முதலாகப் பொருந்திய ன, ள, ர என்னும் மூன்று மெய்யீற்று உயர்திணை முப்பாற் பெயர்களும், வை, து என்கின்ற இரண்டு ஈற்று அஃறிணை யிரு பாற்பெயர்களும், என்ற இரண்டு பொதுபபெயர்களும் இவைபோல்வன பிறவும் விளி யேலாப் பெயர்களாகும்.

தாம்,

தான்

(எ.டு) யான், யாம், நாம், நீ, நீர், எல்லீர் எனவும், நுமன் நுமள், நுமர் எனவும், எவன், எவள், எவர், எது, எவை, யாவன், யாவள், யாவர், யாது, யாவை, ஏவன், ஏவள், ஏவர், ஏது, ஏவை எனவும் தான் எனவும் வருகின்ற இப்பெயர்கள் விளியேலாப் பெயர்களாகும்.

விளையாட்டாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் :

கெடவரலும், பண்ணையுமாகிய இரண்டு உரிச்சொற்

களும் விளையாட்டாகிய குறிப்பை யுணர்த்தும்.