உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

153

(எ-டு)

“கெட வர லாய மொடு'

""

"பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளும்

விளிக்கப் படு பெயர்கள் :

""

இ உ, ஊ, ஐ, ஓ என்கின்ற உயிர்களும் ன, ள, ர, ல, ய என்கின்ற மெய்களும் ஆகிய பத்து எழுத்துக்களையும் இறுதியிலுடைய உயர்திணைப்பெயர்களும், அவற்றுள் ஓகார உயிரும், நகர மெய்யும் ஒழிநத மற்றை எட்டு எழுத்துக்களுடன் ணகர மெய்யும் ஆகாரவுயிரும் சேர்ந்த பத்து எழுத்துக்களையும் இறுதியாகவுடைய இருதிணைப் பொதுப்பெயர்களும், மொழிக்கு இறுதியில் வரும் இருபத்து நான்கு எழுத்துக்களுள் ஞகர நகரங்களும், ஈறாகாத எகரமும் ஒழிந்த இருபத்தோரெழுத்துக்களையும் இறுதியிலுடைய அஃறிணைப் பெயர்களும் விளிக்கப்படு பெயர்களாகும்.

வியங்கோள் வினைமுற்று :

க,

இய,

இயர், அ, அல் என்னும் விகுதிகளை இறுதியிலுடைய வினைச்சொற்கள் வியங்கோள் வினைமுற்றுக் களாம். அது இருதிணை, ஐம்பால், மூவிடங்கட்கும் பொதுவாக வரும்.

(எ.டு)

வாழ்க, வாழிய, வாழியர்

உண்க, உண்ணிய, நிலீயர்

வியல் என்னும் உரிச்சொல் உணர்த்துங்குறிப்பு :

வியல் என்னும் உரிச்சொல் அகலமாகிய குறிப்புணர்த்தும். (எ.டு) ‘வியனுலகம்’

விருத்தியுரையின் இலக்கணம் :

சூத்திரத்திலுள்ள பொருளல்லாமலும், அவ்விடங்களுக்கு இல்லாமல் நிறையாத பொருள்களெல்லாம் விளங்குமாறு

6

தானுரைக்கு முரையானும் ஆசிரிய வசனங்களாலும்

காண்டிகையுரைக்குக் கூறப்பட்ட ஐந்து உறுப்புக்களாலும் ஐயந்தீரச் சுருங்காது உண்மைப் பொருளை விரித்துரைப்பது

விருத்தியுரையாகும்.