உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம்

4

விரைவுக் குறிப்புத்தரும் இடைச் சொற்கள் :

பொள்ளென, பொருக்கென, கதுமென, ஞெரேலென, சரேலென என்றாற்போல்வன

விரைவுக்

பொருளைத்தரும் இடைச்சொற்களாகும்.

விரைவுக் குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் :

குறிப்புப்

கதழ்வும், துனைவும் ஆகிய இரண்டு உரிச்சொற்களும் விரைவாகிய குறிப்பை உணர்த்தும் உரிச்சொற்களாகும். (எ.டு) ‘கதழ்பரிநெடுந்தேர்’

துனைபரி நிவக்கும் புள்ளிமான்'

விலங்குகளுக்கு வழங்கும் ஆண்பாற் பெயர்கள் :

களிறு, ஒருத்தல் ஏறு என்பன வேழத்துள் ஆண்பாலுக்கு வழங்கும் பெயர்களாகும் ஒருத்தல். ஏறு என்பன பன்றியுள் ஆண்பாலுக்கு வழங்கும் பெயர்களாகும். ஒருத்தல், ஏறு, ஏற்றை, போத்து இரலை, கலை என்பன புல்வாயுள் ஆண்பாலுக்கு வழங்கும் பெயர்களாகும். ஒருத்தல், போத்து, ஏற்றை என்பன புலியுள் ஆண்பாலுக்கு வழங்கும் பெயர்களாகும். ஒருத்தல், ஏறு, கலை, ஏற்றை என்பன உழையுள் ஆண்பாலுக்கு வழங்கும் பெயர்களாகும். ஒருத்தல், ஏறு, ஏற்றை என்பன மரையுள் ஆண்பாலுக்கு வழங்கும் பெயர்களாகும். ஒருத்தல், ஏறு, ஏற்றை என்பன கவரியுள் ஆண்பாலுக்கு வழங்கும் பெயர்களாகும். ஒருத்தல், ஏறு, ஏற்றை என்பன கராத்துள் ஆண்பாலுக்கு வழங்கும் பெயர்களாகும். ஒருத்தல் போத்து, ஏற்றை, கண்டி என்பன எருமையுள் ஆண்பாலுக்கு வழங்கும் பெயர்களாகும். சுறவில் ஆண் ஏற்றை எனப்படும். போத்து, ஏறு, ஏற்றை என்பன பெற்றத்துள் ஆண்பாலுக்கு வழங்கும் பெயர்களாகும். முசுவில் ஆண் எனப்படும். குரங்கும், ஊகமும் இவ்வாறே கொள்ளப்படும். கடுவன் எனவும் வரும். மோத்தை, தகர், உதள், அப்பர் என்பன ஆட்டின் ஆண்பாலுக்கு வழங்கும் பெயர் களாகும்.

கலை

விலங்குகளுக்கு வழங்கும் பெண்பாற் பெயர்கள் :

யானையுள் பெண்ணினைப் பிடி என வழங்குவர். குதிரை, ஒட்டகம், மரை, கழுதை ஆகிய விலங்குகளின் பெண்பாற் பெயர் பெட்டை என்பதாகும். பெட்டை, பெடை, பேடை என்பன பறவைகளின் பெண்பாற்பெயர்களாகும். கோழி, கூகை, மயில்