உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

155

ஆகியவற்றின் பெண்பாற் பெயர் அளகு என்பதாகும். பிணை, பிணா, பிணவு, பிணவல் ஆகிய நான்கும் புல்வாய் என்பவற்றின் பெண்பாற்பெயர்களாகும். நவ்வி என்பதன் பெண்பாற்பெயர் பிணை என்பதாகும். உழை, கவரி ஆகியவற்றின் பெண்பாற் பெயர் பிணை என்பதாகும். பாட்டி, பிணவு, பிணவல் என்பன பன்றியின் பெண்பாற் பெயர்களாகும். பிணவு, பிணவல், பாட்டி என்பன நாயின் பெண்பாற் பெயராகும். நரியின் பெண்பாற்பெயர் பாட்டி என்பதாகும். குரங்கு, முசு, ஊகம் ஆகியவற்றின் பெண்பாற் பெயர் மந்தி என்பதாகும். மூடு, கடமை என்பன ஆட்டின் பெண்பாற் பெயர்களாகும்.

விழுமம் என்னும் உரிச்சொல் உணர்த்துங் குறிப்பு :

விழுமம் என்னும் உரிச்சொல், சீர்மை, சிறப்பு, இடும்பை ஆகிய குறிப்புகளையுணர்த்தும்.

""

(எ-டு) "விழுமியோர் காண்டொறுஞ் செய்வர் சிறப்பு “வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து “நின்னுறு விழுமங்களைந்தோன்

""

விறப்பு என்னும் உரிச்சொல் உணர்த்துங்குறிப்பு :

விறப்பு என்னும் உரிச்சொல் செறிவு, வெறுவுதல் ஆகிய குறிப்புகளை யுணர்த்தும்.

வினா :

(எ.டு) "விறந்த காப்போடுண்ணின்று வலியுறுத்தும்”

66

‘அவ லெறி யுலக்கைப் பாடு விறந்தயல’

""

அறியக் கருதியதை வெளிப் படுத்துவது வினாவாகும். அது அறியாமை, ஐயம், அறிவு, கொளல், கொடை, ஏவல் என ஆறு வகைப்படும்.

(எ-டு)

ஆசிரியன் ‘இச் சூத்திரத்திற்குப் பொருள் யாது?' என்பது

வினா.

அறி

மாணாக்கன் 'இச் சூத்திரத்திற்குப் பொருள் யாது?' என்பது அறியாமை வினா.

குற்றியோ? மகனோ? என்பது ஐய வினா.