உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இளங்குமரனார் தமிழ்வளம் 4

சில

பாட்டியல் நூல்கள் எழுத்து பா முதலியவற்றுக்கும் வருணம் காட்டியும் நச்செழுத்து, அமுத எழுத்து, பொருத்தம் கணியம் என இயற்கைக்கு மாறாக நடையிட்டுச் நூற்றாண்டுகள் (18, 19) இலக்கியத்தின் இயற்கைவளம் பொருள் நயம் - கெடுத்தன.

இந்நிலைக்குப்பின் இயற்கையொடு தழுவிய எளிய நடை ரிலா வகையில் பொருளறி வாய்ப்பு என்பவை அமையப் பாட்டியற்றும் நிலை படிப்படியே அமைந்தது. உரைநடை யாக்கமும் உருப்பெற்றது.

பாடலொடு, உரைப்பா, உரைவீச்சு, புதுப்பா, ஐக்கூ, துளிப்பா எனப் பல்லபல கிளர்ந்தன.

இவ்வகையில் ஆக்கமும் கேடுமாம் வகையில் தமிழ்

இலக்கண இலக்கியங்கள் வளர்ந்து கொண்டுள.

-

எல்லா வகைப் பாவகைக்கும் இடம் தர, எல்லா வகைப் புதுமைக்கும் வளர்ச்சிக்கும் இடம் தர அமைந்த நூல் தொல் காப்பியம். அதன் வரம்பு மொழிக் காவல் வரம்பு - ஒன்றே ஒன்று. “மொழிக்கேடு ஆகா வகையில் மொழியைப் பயன் படுத்துக” என்பதே!

66

‘உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்” என்பது சான்றோர் ஆணை!

விரிவு பட்ட இலக்கணங்களில் ஓரளவால் சிலவற்றைத் தொகுத்து எழுத்து, சொல், அகப்பொருள், புறப்பொருள், யாப்பு, அணி என்னும் முறையில் அகரப்படுத்தி வேண்டும் அளவால் பொருளும் விளக்கமும் எடுத்துக் காட்டும் தரப்பட்ட நூல் இஃதாகலின் “ஐந்திலக்கணச் சுருக்கம்” எனப்பட்டதாம்!

இதன் எழுத்தும் சொல்லும் முன்னரே சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வழியே வெளிப்பட்டது. இதுகால், ஐந்திலக் கணங்களும் ஒரு மொத்தமாக வளவன் பதிப்பக வழியே வெளிப்படுகின்றது.

தொல்காப்பிய உரைகள், அகராதிகள், இலக்கணப் பேரகராதி எனக் கருவி நூல்களைத் தொகுதி தொகுதியாக வெளியிட்ட தமிழ்மண் பதிப்பகம், இச்சுருக்க அகராதியையும் வெளியிடுகின்றது. இவ்வெளியீட்டுப் பொறுப்பை மேற் கொண்ட தமிழ்த்தொண்டர், தமிழ்ப் போராளி, தமிழ்க் கொடைஞர்