உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

வினையாலணையும் பெயர் விகாரப்படுதல் :

வினையாலணையும்

பெயர்கள்

157

சிறுபான்மை

இயல்பாகியும், பெரும்பாலும் விகாரப்பட்டும் வரும்.

(எ.டு) நடந்தான னை எனவும் நடந்தோன் எனவும் நடந்தன

எனவும் நடந்தவை எனவும் வரும்.

வினையுடனுமுடியுந்தன்மை வினைமுற்றுக்கள் :

செய்கென்னுந்

தன்மை யொருமை முற்றும்,

செய்குமென்னுந் தன்மைப்பன்மை முற்றும் பெயருடனே யன்றி வினையொடு முடிந்தாலும் வினைமுற்றேயாம்.

(எ.டு) உண்டு வந்தேன்

வினையெச்சம் :

உண்கும் வந்தேம்.

தொழிலும், காலமும் விளங்கி பாலும் வினையும் குறைந்து நிற்பன தெரிநிலை வினையெச்சமுங் குறிப்பு வினையெச்சமுமாம். வினையெச்சங்கொள்ளும் வினைச்சொற்கள் :

உடன்பாடும் எதிர்மறையும் பற்றிவருந் தெரிநிலையுங் குறிப்புமாகிய வினைமுற்றும், பெயரெச்சமும், வினையெச்சமும், வினையாலணையும் பெயரும், தொழிற் பெயரும் ஆகிய ஐவகை வினைச்சொற்களும் வினையெச்சங் கொள்ளும் வினைச்

சொற்களாகும்.

வினையெச்ச வாய்பாடுகள் :

செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென என்பவை இறந்தகாலத்தையும், செய என்பது நிகழ்காலத்தையும், செயின், செய்யிய, செய்யியர், வான், பான், பாக்கு என்பவை யாறும் எதிர் காலத்தையும் காட்டும் வினையெச்ச வாய்பாடுகளாகும்.

(எ.டு)

இறப்பு

நடந்து வந்தாள்

நிகழ்வு நடக்க வல்லன்

எதிர்வு

வரின் கொள்ளும்

உண்குபுபோனான்

பெய்யாக் கொடுக்கும்

ஆடிய தந்தான்

உண்ணியர் வருவான்