உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம்

4

காணூ மகிழ்ந்தான்

கொல்வான் சென்றது

உண்டெனப் போனான் தின்பான்புகுந்தது செய்பாக்கு வந்தான்

வேற்றுமைத் தொகை :

ஐ முதலிய வேற்றுமை யுருபு இடையிலே கெட்டு நிற்கப் பெயரோடு பெயரும், பெயரோடு வினை, வினைக் குறிப்புப் பெயர்களுந் தொடர்வது வேற்றுமைத் தொகையாகும்.

(எ.டு)

நிலம் கடந்தான் (ஐ) இரண்டாம் வேற்றுமைத்தொகை தலைவணங்கினான் (ஆல்) மூன்றாம் வேற்றுமைத்தொகை சாத்தன் மைந்தன் (கு) நான்காம் வேற்றுமைத்தொகை ஊர்நீங்கினான் (இன்) ஐந்தாம் வேற்றுமைத்தொகை சாத்தன் கை (அது) ஆறாம் வேற்றுமைத்தொகை குன்றக்கூகை (கண்) ஏழாம் வேற்றுமைத்தொகை.

வேற்றுமைப் புணர்ச்சி :

ஐ, ஆல், கு, இன், அது, கண் என்னும் ஆறுருபுகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச் சொற்கள் புணர்வது வேற்றுமைப் புணர்ச்சியாகும்.

(6T.1)

வேற்றுமைத் தொகை உருபு

வேற்றுமை விரி.

மரம் வெட்டினான் - ஐ - மரத்தை வெட்டினான். கல் எறிந்தான் ஆல் - கல்லால் எறிந்தான்

கொற்றன் மகன் கு கொற்றனுக்கு மகன்

மலை வீழருவி - இன் - மலையின் வீழருவி

சாத்தன் கை அது - சாத்தனது கை

மலைநெல் கண்

மலையின்கணெல்.

வேற்றுமை யுருபின் முன் வல்லினம் புணர்தல் :

ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும் அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின்

முன்னும் வரும் வல்லினம் மிகா.