உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

(எ.டு) மகனொடு போனான், சாத்தனோடு வந்தான்

தனது கை, தனாதுகை, தன கைகள்.

வேற்றுநிலை மெய்ம் மயக்கம் :

159

பதினெட்டு மெய்களிற் க, ச, த, ப என்னும் நான்கையும் நீக்கிய மற்றைப் பதினான்கு மெய்களும் பிறமெய்களோடு கூடும் கூட்டம் வேற்று நிலை மெய்ம் மயக்கமாகும். மெய்யெழுத்தை அடுத்து நிற்கும் மெய் மெய்மயக்கமாகும்.

வேற்றுமை :

தன்னை ஏற்றுக்கொள்ளுதற்குரிய எல்லாவகைப்பட்ட பெயர்கட்கும் இறுதியில் வந்து அப்பெயர்களின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை. அவ்வேற்றுமை, முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை என எட்டுவகைப்படும். (எ.டு) வளவன் அடித்தான்

வளவனை அடித்தான்

வெகுளியாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் :

கறுப்பும், சிவப்புமாகிய உரிச்சொற்கள் வெகுளியென்னுங்

குறிப்பை யுணர்த்தும்.

(எ.டு) "நிற் கறுப்ப தோரருங் கடிமுனையள்

“நீ சிவந் திறுத்த நீரழி பாக்கம்

""

‘வை’ என்னும் உரிச்சொல் உணர்த்துங் குறிப்பு :

வை என்னும் உரிச் சொல் கூர்மை என்னுங் குறிப்பை யுணர்த்தும். வை = நெல்; அதன் நுனைக் கூர்மையால் உரியாயிற்று. (எ.டு) 'வைநுனைப் பகழி'