உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

அகத்திணைக்குரிய நான்காம் நிலை மெய்ப்பாடுகள் :

161

பாராட்டிக் கூறுதல், பெண்களின் இயல்பாகிய மடமை கெடுமாறு சில கூறுதல், ஊரில் உள்ளவர்களும், சேரியில் உள்ளவர்களும் கூறும் அருளில்லாத கூற்றைக்கேட்டு அலர் ஆயிற்றென நாணுதல், தலைமகன் கொடுக்குங் கையுறைப் பொருளைக் கொள்ளுதல், ஆகிய நான்கும் நான்காம் நிலையின் மெய்ப்பாடுகளாகும்.

அகத்திணைக்குரிய ஐந்தாம் நிலையின் மெய்ப்பாடு :

ஆராய்ந்து உடம்படுதல், வேட்கை நலிதலால் விளையாட் டுத் தொழிலைமறத்தல், தலைவனைக் காண்டல் வேட்கையால் மறைந்தொழுகுதல், தலைமகனைக் கண்ட வழி மகிழ்தல் என்ற நான்கும் ஐந்தாம் நிலைக்குரிய மெய்ப்பாடுகளாகும். அகத்திணைக்குரிய ஆறாம் நிலையின் மெய்ப்பாடு:

பூவுஞ், சாந்தும், துகிலும், முதலியன கொண்டு புறத்தே அழகு செய்ய அகத்தே சிதைவுண்டாதலும், அழகிழந்து தோன்றுதலும், கையுங்களவுமாகப் பிடிபட்ட கள்வரைப் போன்று சொல்லுவன வற்றைத் தடுமாற்றந் தோன்றச் சொல்லுதல், கலங்காது சொல்லுங்கால் செயலறவு தோன்றச் சொல்லுதல் ஆகிய நான்கும் ஆறாம் நிலைக்குரிய மெய்ப்பாடுகளாகும். அகத்திணைக்கு நிமித்தம் ஆதல்:

அகத்திணைக்கே உரியவென்று கூறப்பட்டன இருபத்து நான்கு மெய்ப்பாடுகளாகும், நோக்காமை நோக்கி இன்புறுதல், நோக்குங்காலைச் செற்றார் போல நோக்குதல், மறைந்து காண்டல், தற்காட்டுறுத்தல் போன்ற நிலைகள் பத்தும் அவற்றோடு பொருந்தி நிலை பெற்ற வினையை உடைய நிமித்தமென்று கூறுவர். மேலே கூறப்பட்டவற்றுள் ஐந்திணைக் கண் வருவன ஆறும் கூறப்பட்டது. ஏழாவது நிலை பெருந்திணைப்பாற்படும். எட்டாவது நிலை உன்மத்தம். ஒன்பதாவது நிலை மயக்கம். பத்தாவது நிலை சாக்காடு.

அகத்திணைக்குரிய பாடல்கள்:

நாடக வழக்கிடத்தும், உலகியல் வழக்கிடத்தும் உள்ள அகப்பொருள் கருத்துகளாகிய கைக்கிளை முதலாகப் பெருந் திணை இறுதியாக அமைத்துக் கூறுபவைகளைக் கலிப்பா,