உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ்வளம் 4

பரிபாடல் ஆகிய இருவகைப் பாக்களாலும் கூறப்படும். நாடக வழக்காவது- சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல், உலகியல் ஒழுகலாற்றோடு ஒத்துக் கூறுவது.

அகப்பாட்டுறுப்பு :

வழக்காவது-உலகத்தார்

அகத்திணையின் பன்னிரண்டுறுப்புகள். அவை இயல்பகத் திணை, வகையகத்திணை, பொதுவகத்திணை, சிறப்பகத்திணை, உவமவகத்திணை, புறநிலையகத்திணை, எதிர்நிலையகத்திணை, காரணம் அல்லது கருவியகத்திணை, காரியவகத்திணை, காரகவகத் திணை, முன்னவையகத்திணை, பின்னவையகத்திணை என்பன வாம்.

அகப்புறக் கைக்கிளை-

காமஞ்சாலா இளமைத் தன்மையுடைய தலைமகளிடத் தில் தலைமகன் அவளுடைய குறிப்பினையறியாது பலவற்றைக் கூறுவது.

அகப்புறத்திணை:

அகமாகிய ஐந்திணைக்கும் புறனாகிய ஒழுக்கம். அது கைக்கிளையும் பெருந்திணையும் என இருவகைப்படும். (கைக் கிளை-ஒருதலைக் காமம். பெருந்திணை-பொருந்தாக்காமம்) அகப்புறப்பாட்டு:

மடலேறுதல் முதலாகத் தபுதார நிலையீறாகச் சொல்லப் பட்டவற்றில் இயற்பெயர் கோடாமையாம்.

அகப்புறப் பெருந்திணை

அகன்றுழிக் கலங்கல் முதலாகத் தலைவியுந் தானும் வன மடைந்து நோற்றல் ஈறாகச் சொல்லப்பட்டனவும் பிறவுங் கூறுதலாம்.

அகப்புறம்:

கைக்கிளையும் பெருந்திணையும்; அவை காந்தள், வள்ளி, சுரநடை, முதுபாலை, தாபதம், தபுதாரம், குற்றிசை, குறுங்கலி, இல்லாண்முல்லை, பாசறை முல்லை என்னும் பத்துநுகர்வுகள்.