உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

அகப்பொருட் கைக்கிளை-

163

ஒருதலைக் காமம். அஃதாவது காமம் நுகர்தற்கமைந்த இளமையையுடைய தலைமகளிடத் துண்டாய குறிப்பினைத் தானறியுமளவும் தலைமகன் அவளைச் சாராது நின்று நெஞ்சொடு கூறுவது.

அகப்பொருளுக்குச் சிறப்புவிதி:-

மக்களின் அகவொழுக்கத்தை வரையறுத்து உணர்த்தும் அகப்பொருள் விளக்கம் ஐந்திணையிடத்தும் கூறப்படும் புணர்தல் முதலிய ஒழுக்கத்தின் தலைப்பட்டாரைப் பொதுப்பெயரால் கூறுவதல்லது சிறப்பாக ஒருவர் பெயரையும் அமைத்துக் கூறுதல் என்பது இல்லை.

அகப்பொருள்:

ஐவகை இலக்கணங்களுள் ஒன்று அஃதுண்ணிகழ்ச்சியான சிற்றின்பத்திற்குரிய ஏழுதிணையைக்கூறும். ஏழுதிணைகள்: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந் திணை.

அகப்பொருட்டுறை:

அகப்பாட்டுறுப்புகள்

பன்னிரண்ட

னுள் ஒன்று. அஃதுரைப் போருங் கேட்போருமின்றிப் புலவர் கூற்றா கக் கூறப்படுவது.

அகப்பொருட் பெருந்திணை:

அகத்தின் கண்ணுள்ள இன்பத்தைச் சிலநாள் நுகர்ந்த தலைவனுந் தலைவியும் பின் இடைக்காலத்து நுகராமைக்கான டையூற்றுக் கூற்றுக்களை உணர்ந்து கூறுவது.

அச்சம்:-

இது எண்வகை மெய்ப்பாடுகளுள் ஒன்று. அணங்கு, விலங்கு, கள்வர், அரசர் என்னும் நால்வகையானும் அச்சந் தோன்றும். இவற்றுள் அணங்கென்பன. பேயும், பூதமும், பாம்பும், ஈறாகியபதினெண் கணனும் நிரயப் பாலரும் பிறரும் அணங்குதற்றொழிலினராகிய பெண்டிர்

முதலியனவுமாம்.

சவந்தின்