உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ்வளம்

4

அழுகை:-

து எண்வகை மெய்ப்பாடுகளுள் ஒன்று. இழிவும், இழத் தலும், அசைதலும், வறுமையும் என்ற நான்கிடத்தும் அழுகை தோன்றும். இவற்றுள் இளிவென்பது பிறரால் இகழப்பட்டு எளியனாதல் இழத்தலென்பது, தந்தையுந்தாயுமாகிய சுற்றத் தாரையும், இன்பந்துய்க்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல். அசைதலென்பது தளர்ச்சி; தன்னிலையிற்றாழ்தல். வறுமையென்பது இன்பந்துய்க்காத பற்றுள்ளம்.

எடு:-

"இல் வழங்கு மடமயில் பிணிக்குஞ்

சொல்வலை வேட்டுவ னாயினன் முன்னே

""

(புறம்.252)

இது அசைவு பற்றித் தோன்றிய அவலம். “இன்ன விறலு முளகொல் நமக்கென மூதிற்பெண்டிர் கசிந்தழ நாணிக்

கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை.

இது இழத்தல் பற்றி வந்த அவலம்

அறத்தொடு நிற்றல்-

""

தலைவியின் களவொழுக்கத்தை முறையே வெளிப்படுத்தி நிற்றல். அறதொடு நிற்றலாகும் முறையே வெளிப்படுத்தி நிற்ற லாவது, தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்பாள். தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நிற்பாள். செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்பாள்.

நற்றாய் தந்தை தன்னையர்க்கு அறத்தொடு நிற்பாள்.

தன் ஐயர் = தன் உடன்பிறந்தார்.

அறத்தொடு நிலையின் வகை:

முன்னிலை மொழி, முன்னிலைப் புறமொழி என இரண்டு வகையினையுடையது. அறத்தொடு நிலை. முன்னிலை மொழி யாவது முன்னிற்பார்க்கு நேரே கூறுவது. முன்னிலைப் புற மொழியாவது முன்னிற்பார்க்குக் கூற வேண்டுவனவற்றைப் பிறருக்குக் கூறுவார் போலக் கூறுவது.