உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

அறத்தொடு நிலை நிகழுமிடம்:

165

தலைமகன் வரும் வழியில் உண்டாகிய துன்பத்திற்கு அஞ்சியும், தமர் வரைவு எதிர் கொள்ளாதவிடத்தும், வேற்றார் திருமணம் பேசி வருமிடத்தும், தலைவிக்குக் காவல் மிகுந்த டத்தும் அறத்தொடுநிலை நிகழும்.

அறத்தொடு நிற்றற்குரியார்

தலைவி தோழிக்கு அறத்தொடுநிற்பாள், தோழி செவிலித் தாய்க்கு அறத்தொடு நிற்பாள், செவிலித்தாய் நற்றாய்க்கு அறத் தொடு நிற்பாள், நற்றாய் தந்தை தமையன் முதலானோர்க்கு அறத்தொடு நிற்பாள்.

அறத்தொடு நிற்பார்க்கு வினா நிகழும் இடம்:

தலைமகளிடத்தில் வேறுபாடு கண்டவழி தோழி அவளது வேறுபாட்டிற்குக் காரணங்கேட்பாள். செவிலித்தாய் தோழியைக் கேட்பாள். நற்றாய் செவிலித்தாய், தோழி ஆகிய இருவரையும், தலைவியின் வேறுபாட்டிற்குக் காரணங்கேட்பாள். அக்காலத்து அறத்தொடு நிற்கும் நிலை உண்டாகும் அறமாவது காதல் கொண்டானை மணத்தல். அறிவர் உரிமை:அறிவரென்பவர் தலைமகனுக்குந் தலைமகளுக்கும் மனத் திண்மையைப் பயக்கும் அறிவுரைகளை வழங்கும் உயர்ந்த குணத்தினை உடைய சான்றோராவர்.

இடந்தலைப்பாடு

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து சென்ற தலைமகன் அடுத்த நாள் அவ்விடத்தே வந்து தலைமகளைக் கூடுதல் இடந்தலைப் பாடாம். அது தெய்வந்தெளிதல், கூடுதல், விடுத்தல் என மூன்று வகையினையுடையது. இவற்றுள் தெய்வந் தெளிதலாவது, முன்னே நமக்கவளைக் கூட்டி வைத்த தெய்வம் பின்னும் கூட்டி வைக்கும் எனத் தெளிந்து செல்லுதல். கூடலென்பது தலைவன் தலைவியைக் கூடுதலாம். விடுத்தலென்பது

தலைவியை ஆயத்தின்பாற் செல்லவிடுத்தலாம்.

இடந்தலைப்பாட்டின் இலக்கணவிரி

தலைவன்

இயற்கைப் புணர்ச்சியில் அவளைத் தந்த விதி இன்றும் அவ்விடத்திற்குச் சென்றால் தருமெனச் சேர்தலும், இயற்கைப் புணர்ச்சியில் கண்டதுபோல் தலைவியைக் காண்டலும்,