உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ்வளம்

4

புணர்தலும், புணர்ந்தபின்பு தலைவியைத் தலைவன் புகழ்ந்து கூறுதலும், ஆயக்கூட்டத்துள் தலைவியைச் செலுத்துதலும் ஆகிய ஐந்து விரியினையுடையது இடந்தலைப்பாடு.

இயற்கைப் புணர்ச்சியின் இலக்கணம்:

களவொழுக்கத்தின் கண் நிகழும் நால்வகைப் புணர்ச்சியுள் இயற்கைப் புணர்ச்சியும் ஒன்று. அஃதாவது ஊழினால் தலைமகன் தலைமகளை எதிர்ப்பட அவ்விருவரும் மனமியைந்து தாமே கூடுவதாம். அப்புணர்ச்சி தெய்வத்தாற் புணரும் புணர்ச்சி, தலைமகளாற் புணரும் புணர்ச்சி என இருவகைப்படும். தெய்வத் தாற் புணரும் புணர்ச்சி முயற்சியின்றி முடிவதாகும். தலை மகளாற்புணரும் புணர்ச்சி முயற்சியால் முடிவதாகும்.

இயற்பெயர் வருவதற்கு இடம்:

இலக்கியங்களில் ஒருவரின் பெயரைச் சுட்டிக் கூறுதல் புறத்திணையிடத்து வரப்பெறும்.

இல்வாழ்க்கை:

தலைவனும்

தலைவியும் இல்லின்கண்

வாழும்

வாழ்க்கையின் மேன்மையைக் கூறுதல் இல்வாழ்க்கையாகும். து கிழவோன் மகிழ்ச்சி, கிழத்தி மகிழ்ச்சி, தோழி மகிழ்ச்சி, செவிலி மகிழ்ச்சி என நான்கு வகைப்படும்.

இரவுக்குறி:

தலைவன் தலைவியை

இரவுப்பொழுதில் குறித்த

டத்தில் கூடுதல் இரவுக்குறியாகும்

இரவுக்குறியின் வகை:

வேண்டல், மறுத்தல், உடன்படல், கூட்டல், கூடல், நீங்கல், பாராட்டல், உயங்கல், பாங்கியிற் கூட்டல் என இரவுக்குறி ஒன்பது வகைப்படும்.

வேண்டல் - தலைவன் இரவுக் குறியை வேண்டுதலும், தோழி தலைவியை வேண்டுதலுமாம். மறுத்தல்- தோழியும், தலைவியும் இறையோன் வேண்டுகோளை மறுத்தல்; உடன்படல்-தோழி தலைவன் வேண்டு கோட்கு உடன்படுதலும், தலைவி தோழியின் சொற்கு உடன்படுதலுமாம். கூட்டல்-தோழி தலைவியை அழைத்துச் சென்று குறியிடத்துச் சேர்த்தல். கூடல்- தலைவன் தலைவியைப் புணர்தல்; பாராட்டல்- தலைவன்