உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

4 இளங்குமரனார் தமிழ்வளம்

கருப்பொருட்குச் சிறப்பு விதி :

ஏதேனும் ஒரு நிலத்திற்குரிய மலரும் பறவையும் அந்த நிலத்திற்கும் அதற்குரிய காலத்திற்கும் பொருந்தாது பிறிதொரு நிலத்திடத்துவரினும், வந்த நிலத்திற்குரிய கருப்பொருளாகவே கொள்ளப்படும்.

கவல்மனை மருட்சி :-

தன்னுடைய பெண் காதலனுடன் சென்றதனை உணர்ந்து நற்றாய் வீட்டின்கண் இருந்து வருந்துதல் கவல்மனை மருட்சி. கவல்மனை மருட்சியின் விரி :

நற்றாய் சகுனப் பறவைகளை வணங்குதலும், நற்றாய் பாலை நிலத்தின் வெம்மை குளிருமாறு கூறுதலும், தன் மகளின் மெல்லிய இயல்பாகிய தன்மைக்கு நற்றாய் வருந்துதலும், நற்றாய் தலைவி இளமைத் தன்மைக்கு மனமெலிந்து இரங்கிக் கூறுதலும், நற்றாய் தலைவியது அச்சத்தன்மையை எண்ணித் தான் அச்சமுற்று இரங்குதலும் ஆகிய ஐந்தும் கவல்மனை மருட்சியின் விரிகளாகும்.

களவின் இலக்கணம்

இன்பமும், பொருளும், அறமும் என்று சொல்லப்பட்ட மூன்றனுள், அன்புடன் புணர்ந்த (கைக்கிளை பெருந்திணை நீங்கிய) ஐவகை ஒழுக்கத்தினிடத்தும் நிகழும் காமக் கூட்டம் ஆரிய முறையில் வரையறை செய்யப்பட்ட எண்வகை மணத்துள், காந்தருவ மணத்தோடு ஒத்த இயல்பினையுடையதாம். காந்தருவ மாவது, கொடுப்பாரும் கேட்பாரும் இன்றித் தலைமகனும் தலைமகளும் தனியிடத்தெதிர்ப்பட்டுத் தாமே கூடுவதாம். அஃதாவது களவு நெறி என்பதாம்.

களவிற்குக் காரணம் :-

ஒருவனும் ஒருத்தியும் இல்லறம் நடத்துமிடத்து, அவ்விரு வரையும் மறுபிறப்பினும் கூட்டுவதும் பிரிப்பதுமாகிய நல்விணை தீவினையாகிய இருவகை ஊழிடத்தும், இருவருள்ளமும் பிறப்பு தோறும் ஒன்றுபட்டு நல்வினைக்கண்ணே நிகழ்ந்த ஊழினது ஆணையால், பிறப்பு, செல்வம், அறிவு, அழகு முதலிய பத்துக் குணங்களினாலும் ஒன்றுபட்ட தலைவனும், தலைவியும் வ வட லிட்ட ஒரு நுகம் ஒருதுளை தென்கடலிட்ட ஒருகழி சென்று கோத்தாற் போலவும், வெங்கதிர்க் கனலியும், தண்கதிர்மதியமும்

கட