உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

181

தன்வழி மாறி ஒன்று கூடினாற் போலவும் ஒன்று கூடி ஒருவ ரொருவரைக் காண்டல் காரணமாகத் தமியராய் எதிர்ப்படுவர். இக்கருத்தினை நாற்கவிராசநம்பி காட்சி யென்னுந்துறையில் அமைத்துக் கூறுவர்.

களவின் வழிவந்த கற்பிற் புணர்ச்சிக் கொரு சிறப்பிலக்கணம் :

களவின் வழிவந்த கற்பு, களவின் வழிவாராக் கற்பு என்ற இரண்டனுள் களவின் வழிவந்த கற்பிற் புணர்ச்சி, தலைவி தலைவனுடன் சேர்ந்து உடன் போக்கிற் சென்ற விடத்துக் கொடுத்தற்குரிய தலைவியின் சுற்றத்தார் இல்லாதவிடத்துச் சடங்கொடு மணஞ்செய்து கொள்ளுதலினால், தலைமகள் சுற்றத்தாராற் பெறப்படாத கோட்பாட்டினையுடையதாம். களவிற்புணர்ச்சியின் வகை :

இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற்கூட்டம் என நால்வகையால் களவிற்புணர்ச்சி நடை

பெறும்.

களவொழுக்கின்கண் நிகழும் பிரிவின் வகை

செல்லானாகையால்

ஒருவழித் தணத்தல், வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிதல் என்ற இரண்டும் களவொழுக்கின் நிகழும் பிரிவுகளாம். இவற்றுள் ஒருவழித் தணத்தலாவது, ஓரூரின் கண்ணும், ஒரு நாட்டின் கண்ணும் பிரிதலாம். இப்பிரிவின் கண் தலைமகன் காட் காட்டை க் கடந்தும், நாட்டைக் கடந்தும் இதற்குக் கால வெல்லை இல்லை. வரைவிடை வைத்துப் பொரு வயிற் பிரிதலாவது, திருமணத்தை இடையிலே வைத்து அத்திருமணத்திற்கு வேண்டும் பொருள் காரணமாகப் பிரிதல். இப்பிரிவின் கண் தலைமகன் நாட்டை கடந்தும், காட்டைக் கடந்தும் செல்ல வேண்டியவனாவன். ஆகையால் இப்பிரிவிற்குக் காலவெல்லை இரண்டு திங்களாம். களவுப்புணர்ச்சி நிகழுமிடம் :-

க்

களவுப் புணர்ச்சி பகற்குறி. இரவுக் குறி என்னும் இரண்டு பகுதியினையுடையது. பகற்குறியாவது இல்லின் எல்லையைக் கடந்த விடத்தில் தலைவன் தலைவியைக் கூடுதல். இரவுக் குறியாவது இல்லின் எல்லையைக் கடவாதவிடத்தில் தலைவன் தலைவியைக் கூடுதல்.