உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ்வளம்

4

களவு வெளிப்படுவதற்குமுன் நிகழும் வரவிற்கு இலக்கணம் :-

இயற்கைப் புணர்ச்சி முதலாகிய நான்கு வகைப்பட்ட புணர்ச்சியிடத்துந் தலைமகன் தானே தெளிவுபெற்று வரைதலும், தோழியால் தெளிவுப்படுத்தப்பட்டு வரைதலும் உண்டு.

களவு வெளிப்பட்டபின் வரைதற்கு இலக்கணம் :

புணர்ந்துடன் போய்த் தலைமகன் தன்னூரிடத்தே வரை தலும், மீண்டுவந்து தம்மூரின் கண்ணே வரைதலும், உடன் போக்கு இடையீடுபட்டு வரைதலும், தலைமகளின் பெற்றோர்கள் வழிபட்டுவரைதலும் எனக் களவொழுக்கம் வெளிப்பட்ட பின் வரைதல் நான்கு வகைப்படும். இவற்றுள் மீண்டும் வரைதல் என்பது தலைமகள் மனையின் கண்ணே வரைதலும், தலைமகன் மனையின் கண்ணே வரைதலும் என இரண்டு வகைப்படும்.

களவு வெளிப்பாட்டிற்குரிய கிளவித் தொகை :

உடன் போக்கு, கற்பொடு புணர்ந்தகவ்வை, மீட்சி என்ற மூன்றும் களவு வெளிப்பாட்டிற்குரிய கிளவித் தொகையாகும். களவொழுக்கின் கண் புணர்ச்சி நிகழுந்திறம் :

உள்ளத்தாற்

புணரும்

களவொழுக்கத்தின்கண் புணர்ச்சியும், உடலால் புணரும் புணர்ச்சியும் என்ற இருவகைப் புணர்ச்சிகளும் தலைமகனுக்கும் தலைமகளுக்கும் உரியனவாம். களிறுதரு புணர்ச்சி :-

இதுவும் செவிலிக்குப் பாங்கி அறத்தொடு நிற்கும் முறை களுள் ஒன்று. யாம் சோலையில் விளையாடுகையால் ஒரு யானை பாய வரும்போது நின்மகள் அலறிக் கூவ அவ்வழியே வந்தான் ஒருவேந்தன் விரைந்துவந்து நின்மகளை இடப் பக்கத்தில் அணைத்துக் கொண்டு வலக்கையில் வேலெடுத்து யானையொடு பொருது துரத்தினான். அன்றுமுதல் அவள் அவன் நினைவாகவே இருக்கிறாள் என்று தலைவியின் களவொழுக்கத்தைச் செவிலிக்குப் பாங்கி புலப்படுத்தல். கற்பின் இலக்கணம் :-

தலைவனும் தலைவியுங் கூடி நடத்தும் இல்வாழ்க்கையின் கண் உண்டாகின்ற உள்ளமகிழ்ச்சியும், ஊடலும், ஊடலுணர்த் தலும், பிரிவும், பிரிந்தவிடத்து உண்டாகின்ற விகற்பம் முதலியன வெல்லாம் கற்பின் இலக்கணமாகும்.