உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

4 இளங்குமரனார் தமிழ்வளம்

கற்பொடு புணர்ந்த கவ்வை :-

இதுவும் களவு வெளிப்பாட்டிற்குரிய கிளவித் தொகை களுள் ஒன்று. தலைவி தலைவனுடைய உடைமையாய்க் கற்பொடு கூடியிருத்தலை அயலார் விரவிய சேரியினர் பலரும் அறிதல்.

கற்பொடு புணர்ந்த கவ்வையின் வகை :-

செவிலிபுலம்பல், நற்றாய்புலம்பல், கவர்மனை மருட்சி, கண்டோரிரக்கம், செவிலிபின்தேடிச் சேறல் என்ற கற்பொடு புணர்ந்தகவ்வை ஐவகைப்படும்.

கற்பு :-

கவ்வை-ஆரவாரம், ஒலி.

கற்பிக்கப் படுதலாற் கற்பாயிற்று. கற்பித்தலாவது அறிவும், ஒழுக்கமும், தலைவனாற்கற்பிக்கப் படுதலும், தாய்தந்தையரால் கற்பிக்கப்படுதலும், செவிலித்தாயால் கற்பிக்கப்படுதலும், சான் றோரால் கற்பிக்கப்படுதலும் எனக் கற்பித்தல் பலவகைப்படும். "கற்பெனப் படுவது சொற்றிறம் பாவை

66

“கற்பு மனத்திண்மை.

கற்பின்வகை :-

களவொழுக்கத்தின் வழியாக வந்த கற்பும், களவொழுக்க மின்றிவந்த கற்பும் என கற்பு இருவகைப்படும்.

கற்பிற்புணர்ச்சியின் வகை :-

குரவர்களால் திருமணம் செய்விக்கப் பெற்றுப் புணரும் புணர்ச்சியும், தலைவன், தலைவியர்களுள் ஊடல் நேர்ந்த காலத்து அவ்வூடல் வாய்களால் நீக்கப் பெற்றுப்புணரும் புணர்ச்சியும் என கற்பிற்புணர்ச்சி இருவகைப்படும்.

காதற் பரத்தையர் இலக்கணம் :-

யாவரையும் விரும்பாத இயல்பையுடைய சேரிப்பரத்தை யின் மகளிராய்த் தம் அன்பினால் தலைமகனோடு புணர்பவர் காதற்பரத்தையாவர். அக்காதற் பரத்தையர் தலைவனால் திருமணம் செய்து கோடற்கும் உரியர். (பரத்தையரைப் பேசா நூல் திருக்குறள்.)