உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

இளங்குமரனார் தமிழ்வளம் 4

குறிஞ்சிக்குரிய பெரும் பொழுதும் சிறுபொழுதும் :

கூதிர்காலமும், முன் பனிக்காலமும், யாமப்பொழுதும் குறிஞ்சித்திணைக்குரிய பெரும் பொழுதும், சிறுபொழுது

L

மாகும்.

குறிஞ்சிக்கருப்பொருள் :-

தெய்வம் - முருகன்

தலைமையர் - பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி,

கொடிச்சி

மக்கள் - குறவர், கானவர், குறத்தியர்.

புள் - கிளி, மயில்

விலங்கு - புலி, கரடி, யானை, சிங்கம்.

ஊர் - சிறுகுடி

நீர் - அருவிநீர், சுனைநீர்

பூ - வேங்கைப்பூ, குறிஞ்சிப்பூ, காந்தட்பூ.

மரம் - சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாகம், மூங்கில் உணவு - மலைநெல், மூங்கிலரிசி, தினை.

பறை - தொண்டகப்பறை

யாழ் - குறிஞ்சியாழ்

பண் - குறிஞ்சிப்பண்

தொழில் - வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினை காத்தல், தேனழித்தெடுத்தல், கிழங்கு கிண்டி எடுத்தல், அருவி நீராடல், சுனை நீராடல்.

குறிப்பறிதல் :

தலைமகளுள்ளத்து

நிகழுகின்ற

வேட்கையினைத்

(புணருங்குறிப்பினை) தலைமகனுக்கு அவளது கண்களே விளங்க அறிவிக்கும்.

எடு :-

“இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.