உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இளங்குமரனார் தமிழ்வளம்

4

கைக்கிளைக்குரியார் :

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று கூறப் பட்ட ஐவகை நிலத்தரும் கைக்கிளைக்கு உரியவராவார்.

செப்பல் ;

இது தலைவன் தலைவியர் உடன்போக்கு மீட்சியின் வகைகளுள் ஒன்று. முன் சென்றோர் தலைவியின் வருகையைப் பாங்கியர்க்குச் சொல்லுதல். செப்பல்-சொல்லுதல்.

செப்பல் :

இது தன்மனைவரைதலின் வகைகளுள் ஒன்று. திருமணம் நடந்தமையைத் தோழி செவிலிக்குக் கூறுதலும், அதனைச் செவிலி நற்றாய்க்குக் கூறுதலும், தலைமகன் ‘யான் தலைவியை மணந்தமையை நும் சுற்றத்தார்க்குக் கூறுக' என இகுளைக்குக் கூற அவள் ‘யான் முன்னரே அதனை எம்மவர்க்குக் கூறினென்’ என்றலுமாம்.

செவிலி உரிமை :

தலைமகளுடைய நற்றாய்க்குத் தோழியாகித் தலைமகட்கு வருந் துன்பங்களைப் போக்கி, நல்லறிவும் ஒழுக்கமுங் கற்பித்துத் தலைமகளை வளர்த்த தாய் செவிலித் தாயாவாள்.

செவிலி மகிழ்ச்சி :

சவிலித் தாயினது மகிழ்ச்சி. இது மணமனை சென்று வந்த செவிலி நற்றாய்க்குத் தலைவியின் கற்பின் தன்மையையும், தலைவன் தலைவியர்களின் வாழ்க்கைத் தன்மையையும், அவ்விருவர்களின் காதலையும் உணர்த்தலால் விளங்கும்.

செவிலி பின் தேடிச் செல்லலின் விரி:

வருந்துகின்ற நற்றாயைச் செவிலி தேறுமாறு கூறுதலும், தலைவியைச் செவிலி தேடிப் போகுங் காலத்து வழியிடை எதிர் வரும் முக்கோலுடைய அந்தணரை வினவுதலும் செவிலி வின வியதற்கு முக்கோலுடைய அந்தணர் அது உலகியல் இயல்பு என்று காரண மெடுத்துக் காட்டலும், செவிலித்தாய் பாலை நிலத்துப் பெண்ணொடு புலம்பிக் கூறுதலும், செவிலி குரவு என்னுங் கொடி யொடு வருந்துதலும், செவிலி பாலை நிலத்தின் மேற் காலழுந்திய குறியைக் கண்டு இரங்கிக் கூறுதலும், உடன்போக்குப் போய்த் தலைவனும் தலைவியும் போல்