உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

189

அன்புகலந்து வழியிடை வருவோர் இருவரைக் கண்டு அவர் களிடம் தலைவியைப் பற்றி செவிலி வினாதலும், செவிலியிரங்கி வருந்துதலை எதிர்வந்தோர் தேற்றிக் கூறுதலும், செவிலி தன் புதல்வியைக் காணாது துன்பம் மிகுதலுமாகிய ஒன்பதும் செவிலி பின்தேடிச் செல்லலின் விரிகளாகும்.

செவிலி புலம்பலின் விரி:

தலைவி

தலைவியைக்காணா விடத்துச் செவிலித் தாய் பாங்கியை வினவுதலும், தலைவனுடன் உடன் போக்குச் சென்றதைப் பாங்கி செவிலித்தாய்க்கு அறிவித்தலும், தலைவி உடன் போக்குச் சென்றதைப் பாங்கி மூலம் அறிந்த செவிலி வருந்திக் கூறுதலும், தலைவி உடன் போக்குப் போதற்குத் தன் குறிப்பினால் அறிவித்ததன்மையை அறிந்திலேன் என்று தன் அறியாமையை நொந்து கூறுதலும், உடன் போக்குச் சென்ற தலைவி தன்பால் வரச் செவிலி தெய்வம் வாழ்த்தலும் ஆகிய இவை செவிலி புலம்பலின் விரிகளாகும்.

செவிலி பின்தேடிச் சேறல்:

உடன் போக்குச் சென்ற தலைவியைச் செவிவி பின்னே தேடிக் கொண்டு செல்லுதல்.

செவிலி புலம்பல்:

தன்

பண் காதலனுடன் சென்றதனை உணர்ந்து செவிலித்தாய் புலம்புதல்.

செவிலி அறத்தொடு நிற்குந்திறன்:

தலைமகள் வேறுபாடு கண்ட விடத்துச் செவிலித்தாயை நற்றாய் அவ் வேறு பாட்டிற்குக் காரணம் வினாவியவிடத்துச் செவிலி நற்றாய்க்கு முன்னிலைப்புற மொழியால் அன்றி முன்னிலை மொழியான் தலைவியின் களவை வெளிப்படுத்திக் கூறுவாள்.

செவிலி அறத்தொடு நிற்குந்திறம்:

செவிலி அறத்தொடு நிற்குங் காலத்து நற்றாய்க்குத் தலைவியின் களவொழுக்கத்தை விளங்க அறிவிக்கும். செலவழுங்கக் காரணம்:

வீட்டின்கண் தலைவியையும் தன் உள்ளத்தினையும் தேற்றுவதற்காகவும், இடைச்சுரத்தினிடத்துத் தன்

உள்ளத்