உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

இளங்குமரனார் தமிழ்வளம் 4

தினைத் தேற்றுதற்காகவும் பிரிவிற்கு வருந்துவானே தவிர தலைமகன் தான் குறிப்பிட்ட செயலுக்குப் போகாமல் இரான். (செலவழுங்கல்- பிரிவிற்குவருந்துதல்.)

சிறு பொழுதின் வகை:

மாலை, யாமம், வைகறை, விடியல், எற்பாடு, நண்பகல் என்பன சிறுபொழுதின் வகைகளாகும்.

6

இவற்றுள் மாலையாவது-இராப் பொழுதின் முற்பகுதி யாமமாவது-இராப்பொழுதின் நடுப்பகுதி, வைகறையாவது- இராப்பொழுதின் பிற்பகுதி, விடியலாவது-பகற் பொழுதின் முற்பகுதி, எற்பாடாவது-பகற் பொழுதின் பிற் பகுதி, நண்பகலா வது-பகலின் நடுப்பகுதி.

தலைமக்கள் நாடிடையிட்டுச் செல்லுங்கால் செல்லுந்திறன்:

ஓதற்பிரிவு முதலிய பிரிவின் கண் தலைமக்கள் நடந்து செல்லுதலும், குதிரை, யானை முதலியவற்றில் ஊர்ந்து செல்லு தலும், கலத்தில் அமர்ந்து நீர்வழியாகச் செல்லுதலுமாம்.

தலைமக்கட்காகாத குணம்:

பொறாமை, அறனழியப் பிறரைச் சூழும் சூழ்ச்சி, தம்மைப் பெரியராகமதித்தல், பிறனைக் காணாதவிடத்து இகழ்ந்து கூறுதல், கடுஞ்சொல் கூறுதல், மறதி, முயற்சியின்மை, தம்முடைய குலச்சிறப்பை யெண்ணி மதித்து இன்புறுதல், பேதைமை, தான் காதலிக்கப் பட்டாரைக் கண்டவழி அவர் போல்வார் இவர் என ஒப்பிட்டு நினைத்தல் ஆகியவை தலைமக்கட்கு இருத்தல் கூடாத குணங்களாகும்.

தலைமகள் அறத்தொடு நிற்குமிடம்:

இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் என்ற மூன்று புணர்ச்சிக் கண்ணும், ஒரு வழித் தணத்தலானும் தலைவன் வரவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிதலானும், செவிலி தலைமகனைப் பகற் குறி, இரவுக்குறி ஆகிய இடத்தில் காண்ட லானும், இற் செறித்தலானும், தனக்குத்துன்பம் மிகுமாயின் தன்னைத் தோழி வினவிய விடத்தும் வினவா விடத்தும் தலைமகள் தோழிக்கு அறத்தொடு நிற்பாள்.

தலைமகளாற் பெறும் இயற்கைப் புணர்ச்சி:

தலைமகளாற் பெறும் இயற்கைப் புணர்ச்சி தலைமகன் முயற்சியால் முடிவதாகும் இப்புணர்ச்சி வேட்கை யுணர்த்தல்,