உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

191

மறுத்தல், உடன்படல், கூட்டம் என்ற நான்கு வகையினை யுடையது.

இவற்றுள் வேட்கை உணர்த்தலாவது-தலைவிக்குத் தலை வன் தன்வேட்கையைத் தெரிவித்தல், மறுத்தலாவது-தலைவி அதனை மறுத்தல், உடன்படலாவது-தலைவி புணர்ச்சிக்கு ணங்குதல், கூடுதலாவது-தலைவன் தலைவியைக் கூடுதல். தலைமகளாற் பெறும் இயற்கைப் புணர்ச்சியின்விரி:

இரந்து பின்னிற்றற் கெண்ணல் இரந்து பின்னிற்றல், முன் னிலையாக்கல், மெய் தொட்டுப் பயிறல், பொய் பாராட்டல், இடம் பெற்றுத்தழாஅல், வழிபாடு மறுத்தல், இடையூறு கிளத்தல், நீடு நினைந்திரங்கல், மறுத்தெதிர்கோடல், வறிது நகை தோற்றல், முறுவற் குறிப்புணர்த்தல், முயங்குதலுறுத்தல், புணர்ச்சியின் மகிழ்தல், புகழ்தல், முதலிய பதினைந்தும் தலைமகளாற் புணரும் இயற்கைப் புணர்ச்சியின் விரிகளாகும். தலைவிக்கு ஊடல் நிகழும் இடம்:

அயன்மனைப் பிரிவு, அயற்சேரியின் அகற்சி, புறநகர்ப் போக்கு ஆகிய மூவகைப் பரத்தையிற் பிரிவின் கண்ணும் தலைவன் மீது தலைவி ஊடல் கொள்வாள். (ஊடல்- கணவன் மனைவியருக்கிடையில் ஏற்படும் காதற்பிணக்கு)

தலைவி அறத்தொடு நிற்குந்திறன்:

களவுப் புணர்ச்சியால் அலர் எழுதல் கண்டு தந்தையர் முதலாயினோர் வெறுப்படைந்ததறிந்த தலைவன் பிரிந்து செல்ல பிறிவாற்றாத தலைவி அழ, தோழி அருகில் இருந்து ஆற்றுவித்து அவள் கண்ணீரைத் துடைத்து அழுதற்குக் காரணங் கேட்டலும், தலைமகள் தன் அழுகைக்குக் காரணங் கூறுதலும், தலைவன் தெய்வத்தைக் காட்டிக் கரியென்று சூளுறவு சொல்ல, உண்மையென்று தெளிந்து அதனைப் பாங்கிக்குப் பொருந்தக் கூறுதலும், தலைவி தலைவன் நீங்கினமை கூறலும், தலைமகன் பண்பைத் தோழி பழித்துக் கூறுதலும், அங்ஙனங் கூறக் கேட்ட தலைமகள் சொற்பொருள் ஓரியல்புபட மொழிதலும், தெய்வத்தின் முன்னே பிரியே னென்று ஆணை யிட்டுப் பிரிந்து போனாரால் தெய்வங் கொடுந் தெய்வமாதலால் சீறாதபடி அவர் எங்கட்குக் குற்றஞ் செய்தாரல்லர், நீ பொறுத்துக் கொள் என்று வேண்டிக் கொள்ளுதற்கு இரண்டுபேரும் செல்வோம் என்று தலைவி பாங்கியுடன் கூறுதலும், தன்மெய் வேறு