உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

இளங்குமரனார் தமிழ்வளம்

4

பாட்டாலும், ஊரிலுள்ளார் அலர் தூற்றலாலும் நற்றாய் உள்ளத்தில் வெறுப்பு உண்டாகி என்னைக் காவல் செய்தாள் என்று தலைவி பாங்கிக்குக் கூறுதலும், செவிலித்தாய் இருட்குறியிடத்துத் தலைவன் வரக்கண்டாள் எனத் தலைவி ள் பாங்கிக்குக் கூறுதலுமாகிய ஏழும் பாங்கிக்குத் தலைவி அறத்தொடு நிற்குந்திறனாகும்.

தலைமகன் பிரியும் பிரிவிற்குச் சிறப்பு விதி:

தலைமகனுக்குக் கூறப்பட்ட அறுவகைப் பிரிவேயன்றி, குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் ஆகிய நால்வகை நிலத்தினும் தெய்வங்கட்கு நடைபெறும் திருவிழாக் காரணமாகவும், மேற்கூறிய நிலத்தில் வாழும் மக்கள் அறநெறி தவறிய விடத்து அவற்றை நீக்கி அறத்தை நிலை நிறுத்தற் பொருட்டும், தலைமகன் தலைவியைப் பிரிந்து செல்வான்.

தலைமகன் பிரிவுக்கு இலக்கணம்:

ஓதற் பிரிவு, காவற்பிரிவு, தூதிற்பிரிவு, துணைவயிற்பிரிவு, பொருள்வயிற்பிரிவு ஆகிய ஐவகை பிரிவுக்குத் தலைமகன் பிரியும் பொழுது தலைவியிடம் தம் பிரிவைச் சொல்லியும் பிரிவான், சொல்லாமலும் பிரிவான். ஆனால் பாங்கியிடத்துத் தன்னுடைய பிரிவைக் கூறிவிடுவான். தலைவன் தலைவியிடம் தம்பிரிவைக் கூறாவிட்டாலும் அவனது குறிப்பால் தலைவன் பிரியப் போகிறான் என்பதைத் தலைவி அறிந்து கொள்வாள். தலைமகன் செலவழுங்கல்:

ஓதற் பிரிவு முதலிய ஐவகைப் பிரிவின் கண்ணும் பிரியுந் தலைமகன் போதற்கேயன்றிப் போகாமைக்கும் உரியவனாவான். (அழுங்கல்=கவலுறல்; செல்லத் தயங்குதல்.)

தன்மனைவரைதல்:

ன் போக்குப் போய் மீண்டுவந்த தலைவன் தன்னூர்க்குத் தலைவியைக் கொண்டு சென்று தன் மனையின் கண் வரைந்து கொள்ளுதல். இது வினாதல், செப்பல், மேவுதல் என மூவகைப்படும்.

தன்மனைவரைதலின் விரி:

தலைவி நற்றாய் தன் இல்லில் மணஞ் செய்யும் விருப்பினாற் செவிலியை வினாதலும், செவிலித்தாய்க்குத் தோழி தலைவன் தலைவியை மணந்து கொண்டமையைத்