உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

193

தெரிவித்தலும், தலைவியின் மணம் நடந்தேறியதைச் செவிலி நற்றாய்க்குக் கூறுதலும், தலைவன் தோழிக்கு யான் தலைவியை வரைந்து கொண்டதை நுமர்க்குக் கூறுக வெனக் கூறுதலும், தோழி இச்செய்தியை முன்னமே கூறியதைத் தலைவனுக்குக் கூறுதலும் ஆகிய ஐந்தும் தன் மனைவரைதலின் விரிகளாகும். திணைமயக்கம்:

ஒரு திணைக்குரிய நிலமொழிந்த முதற்பொருளும், கருப் பொருளும் மற்றொரு திணைக்குரிய முதற்பொருள், கருப் பொருளோடு சேர்ந்துவருவது திணைமயக்கமாம்.

துணைவயிற் பிரிவுக்கு உரியர்:

தன் நண்பனாகிய அரசனுக்குப் பகைவேந்தர்களால் துன்பம் நேர்ந்தவிடத்து, அத்துன்பத்தைப் போக்கத் துணையாகத் தலைமகன் பிரியும் பிரிவு துணைவயிற் பிரிவாகும். இப்பிரிவு ஓராண்டு காலவெல்லையினையுடையதாம். இப்பிரிவின் கண் பிரிந்து சென்ற தலைமகனும் வினை நீட்டித்த விடத்துப் பாசறைக் கண்ணேயிருந்து தலைவியை யெண்ணிப் புலம்புதலும் உண்டு. தூதிற்பிரிவு:

L

அரசர் இருவர் தம்முள் போர் செய்த வழி அப்போரை நிறுத்தி அவரைச் சந்து செய்விப்பதற்குத் தலைவன் பிரியும் பிரிவு தூதிற்பிரிவாகும். இப்பிரிவு ஓராண்டு கால வெல்லையினை யுடையது. இப்பிரிவின் கண் சென்ற தலைமகன் வினை நீட்டித் தவிடத்துப் பாசறைக் கண்ணேயிருந்து தலைவியை யெண்ணிப் புலம்புதலும் உண்டு.

தெளித்தல்:

இது மீட்சியின் வகைகளுள் ஒன்று. செவிலித்தாய் நற் றாய்க்குத் தலைவி நெடுந்தூரம் சென்று விட்டதனைக் கூறி அவளைத் தெளிவித்தலும், உடன்போய் மீண்டு வருகையில் தலைவன் தலைவியினது ஊரைச் சேர்ந்தமையைக் கூறித் தலைவியைத் தெளிவித்தலுமாம்.

தெய்வத்தால் புணரும் இயற்கைப் புணர்ச்சி:

தெய்வத்தாற் புணரும் இயற்கைப் புணர்ச்சி முயற்சியின்றித் தானே முடிவதாகும். இப்புணர்ச்சி கலந்துழி மகிழ்தல், தலைவியின் அழகினைப் பாராட்டிக் கூறுதல், ஏற்புறவணிதல் என்னும் மூவகை விரியினையுடையதாம்.