உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

தெளிவு:

இளங்குமரனார் தமிழ்வளம்

4

தலைவன் கூறிய சொல்லைத் தலைவி மெய் எனத் தெளிந்து ஆற்றுதல் தெளிவாகும்.

தேற்றல்:

இதுவும் உடன் போக்கின் வகைகளுள் ஒன்று. கண்டோர் தலைவன் பதி அணிமையானமையைக் கூறி விடுப்பத் தலைவ னுடன் சென்ற தலைவிக்குத் தன்பதி அடைந்ததனைக் கூறித் தலைவன் அவளைத் தேறச் செய்தல்.

தோழி உரிமை:

செவிலிக்கு மகளாய்ப் பிறந்து நன்மையுந் தீமையும் ஆராயும் அறிவுடையவளாய்த் தலைமகட்குச் சிறந்த துணையாய், அவளது வருத்தத்தைப் போக்குவதற்குரிய அன்புபொருந்திய துணையாக ருப்பவளே தோழியாவள்.

நகை:

து எண்வகை மெய்ப்பாடுகளுள் ஒன்று. இகழ்தல், இளமை, அறிவின்மை, மடமை என்று கூறப்பட்ட நான்கிடத்தும் நகை தோன்றும். இவற்றுள் இகழ்தல் என்பது தான் பிறரை இகழ்ந்து நகுதலும், பிறரால் இகழப்பட்டவழித் தான் நகுதலும் என இரண்டாம் இளமை யென்பது தான் இளமையாற் பிறரை நகுதலும், பிறரிளமை கண்டு தான் நகுதலும் என இரண்டாம் பேதமை யென்பது அறிவின்மை மடமை யென்பது அறிந்தும் அறியாதது போன்று இருத்தல்.

(எ.டு)

“நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்” (புறம்-12) இது எள்ளல் காரணமாக நகை பிறந்தது.

“நகையாகின்றே தோழி

தொழுது நின்றதுவே” (அகம்-56)

.மம்மர் நெஞ்சினன்

து பேதமை காரணமாக நகை பிறந்தது.

நற்றாய் அறத்தொடு நிற்குந்திறம்:

நற்றாய் அறத்தொடு நிற்குங்காலத்துத் தலைவியின் கள வொழுக்கத்தை வாய்திறந்து கூறாள். அதனைத் தலைமகளின் தந்தையும் உடன் பிறந்தாரும் நற்றாயின் குறிப்பினானே அறிந்து கொள்வர்.