உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றாய் புலம்பல்:

அகப்பொருள்

195

தன்னுடைய பெண் காதலுடன் சென்றதனை உணர்ந்து நற்றாய் புலம்புதல்.

நற்றாய் புலம்பலின் விரி:

செவிலித்தாய் நற்றாய்க்குத் தலைவியின் உடன்போக்கை வெளிப்படுத்திக் கூறுதலும், தலைவியின் களவொழுக்கத்தை அறிந்த நற்றாய் பாங்கியிடம் நீ இதை முன்னமே அறிவித் திருந்தால் அத்தலைவனுக்கு அவளை மணஞ்செய்து கொடுத் திருப்பனே என்று கூறிப் பாங்கியொடு வருந்துதலும், அவ்வாறு கூறக் கேட்ட பாங்கி வருந்துதலும் பாங்கியின் வருத்தத்தைக் கண்ட நற்றாய் வருந்துதலும். நற்றாய் பாங்கியொடுவருந்துதலும், நற்றாய் அயலாரொடு வருந்துதலும், நற்றாய் தலைவி பழகி விளையாடும் இடங்களோடு நொந்து கூறுதலும், ஆகிய இவையெல்லாம் நற்றாய் புலம்பலின் விரிகளாகும்.

நிலமாகிய முதற்பொருளின் வகை:

மலையும் மலைசார்ந்த இடமும், சுரமும் சுரஞ்சார்ந்த இடமும், காடும் காடு சார்ந்த இடமும், வயலும் வயல் சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என முதற்பொருள் இ பத்து வகைப்படும்.

நீக்கம்:

இதுவும் உடன் போக்கிடையீட்டின் வகைகளுள் ஒன்று தலைமகன் தலைமகளின் சுற்றத்தார் பின்வருதலை உணர்ந்து தலைமகளை விடுத்துச் செல்லுதல்.

நெய்தற் கருப்பொருள்:

தெய்வம்

உயர்ந்தோர்

குடிகள்

புள்

விலங்கு

ஊர்

நீர்

வருணன்

சேர்ப்பன், புலம்பன், பரத்தி,

நுளைச்சி

நுளையர், நுளைச்சியர்,

பரதர்,பரத்தியர்,

அளவர், அளத்தியர்

கடற் காகம்

சுறாமீன்

பாக்கம், பட்டினம் உவர்க் கேணி, உவர்நீர்