உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

பூ

மரம்

உணவு பறை

யாழ் பண்

தொழில்

இளங்குமரனார் தமிழ்வளம்

4

நெய்தற்பூ தாழம்பூ, முண்டகப்பூ, அடம்பம்பூ

கண்டல், புன்னை, ஞாழல்

மீனும் உப்பும் விற்றுப் பெற்ற பொருள் மீன்கோட்பறை, நாவாய்ப் பம்பை விளரியாழ்

செவ்வழிப்பண்

மீன்பிடித்தல், உப்புண்டாக்கல், அவை விற்றல், மீனுணக்கல், அவற்றை உண்ணவரும் பறவைகளை ஓட்டுதல், கடலாடல்.

நெய்தற்குரிய பெரும் பொழுதும் சிறுபொழுதும்:

கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக் காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என்ற அறுவகைப் பெரும் பொழுதும், எற்பாடாகிய சிறுபொழுதும் நெய்தல்திணைக் குரியவனவாம்.

பகற்குறி:

தலைவன் தலைவியைப் பகற்குறியிடத்துக் கூடுதல் பகற் குறியாகும். குறி= குறிப்பிட்ட இடம். அது கூட்டல், கூடல், பாங்கிற்கூட்டல், வேட்டல் என நால்வகைப்படும். பாங்கியிற் கூட்டத்திற்குரிய கிளவிகளுள் இறுதியிற் பாங்கி தலைமகனுக்குக் குறியிடங் கூறல் முதலாகத் தலைவன் விருந்தினை விரும்புதல் ஈறாகக் கூறப்பட்ட பன்னிரண்டு கிளவிகளும் இதற்குரிய கிளவி களாகும்.

பகற்குறி இடையீடு:

பகற்குறியிடத்து வந்த தலைமகன் குறிக்கட் செல்லாது இடையீடு பட்டுப் போதல் பகற்குறி இடையீடாகும்.

பகற்குறிஇடையீட்டின் வகை:

விலக்கல், சேறல், கலக்கம் என மூன்று வகையினை யுடைய தாகும் பகற்குறிஇடையீடு. விலக்கல்- தலைவனும் தலைவியும் குறியிடத்து வருதலை விலக்கல். சேறல்-தோழி, தலைவியை ஆடும் இடத்தினின்று அழைத்துச் செல்லுதல், கலக்கம்- தலைவனை அடையப் பெறாமையால் தலைவி மனங்கலங்குதலும், தலைவியை அடையப் பெறாமையால் தலைவன் மனங்கலங்குதலுமாம்.