உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

பகற்குறி இடையீட்டின் விரி:

197

தலைவனைப் பாங்கி குறியிடத்து வருவதை விலக்கல். தலைவியைப் பாங்கி குறியிடத்து வருவதை விலக்கல். தலைவி தான் விளையாடிய இடத்தைப் பார்த்து வருந்துதல். பாங்கி விளையாடுமிடம் விட்டு நீங்கித் தலைவியைக் கொண்டு தம்மூர்க்குச் செல்லுதல். தலைவன் குறியிட மாகிய மாதவிப் பந்தரிடத்து வந்து நீட்டித்து நினைந்திரங்குதல். தலைவன் தலைவியில்லாத தினைப்புனத்தை நோக்கி வருந்துதல். தலைவியின் ஊர்தேடிச் செல்ல எண்ணி மயங்கிய நிலையில் தலைவன் கூறுதல் ஆகிய ஏழும் பகற்குறி இடையீட்டின் விரிகளாகும்.

படைக்கலப் பயிற்சிக்குரியார்:

படைக்கலன்களைக் கற்றலும், யானையும், தேரும், குதிரை யும் முதலாயின ஊர்தலும் அரசர், வணிகர், வேளாளர் ஆகிய மூவர்க்கும் உரியனவாம்.

பரத்தையிற் பிரிவு:

தலைமகன் பரத்தை மேற் காதல் கொண்டு தலைவியைப்

பிரிந்து பரத்தையர்

பிரிவாகும்.

சேரிக்குச்

பரத்தையிற் பிரிவின் வகை:

செல்லுதல் பரத்தையிற்

அயல் மனைக்குத் தலைவியைப் பிரிந்து செல்லுதல், அயற் சேரிக்குத் தலைவியைப் பிரிந்து செல்லுதல், நகர்ப் புறத்திற்குத் தலைவியைப் பிரிந்து செல்லுதல் எனப் பரத்தையிற் பிரிவு மூன்று வகைப்படும். இவற்றுள் அயல்மனைப் பிரிவு காமக் கிழத்தியர் காரணமாகப் பிரிவான். இரண்டாவது மணஞ் செய்து கொள்ளப்பட்ட பெதும்பைப் பருவக்கிழத்தியும், காதற் பரத்தையும் விழவும் காரணமாகத் தலைமகன் அயற்சேரியின் கண்ணேபிரிவான். இளஞ்சோலையில் விளையாடுதல் காரண மாகவும், நீர்விளையாட்டு விளையாடுதல் காரணமாகவும் புதியளாகிய பரத்தையைத் தேர்மேல் ஏற்றிக் கொண்டு நகர்ப்புறத்திற்குப் போவான்.

பரத்தையிற் பிரிவு நிகழ்தற்காகக் காலம்:

பூப்பு நிகழ்ந்து (வீட்டு விலக்கு) நீராடியபின் பன்னிரண்டு நாளுங் கருத்தரிக்குங் காலமாதலாற் பரத்தையிற் பிரிந்த