உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

4 இளங்குமரனார் தமிழ்வளம்

தலைமகன் அப்பன்னிரண்டு நாளுந் தலைமகளைப் பிரியப் பெறான்.

பாங்கற் கூட்டம்: (பாங்கன்=தோழன் பாங்கு =பக்கம்)

பாங்கனாற் கூடுங் கூட்டம் பாங்கற் கூட்டமாகும். இது சார்தல், கேட்டல், சாற்றல், எதிர்மறை, நேர்தல், கூடல், பாங்கிற் கூட்டல் என ஏழு வகைப்படும். இவற்றுள் சார்தலாவது- தலைவன் தன் பாங்கனைச் சேர்தல். கேட்டலாவது-பாங்கன் தலைவனது வாட்டத்தைக் கண்டு உனக்கு யாதுற்றது என்று தலைவனைவினாதல். சாற்றலாவது-தலைவன் வாட்டத்தின் காரணத்தைத் தெரிவித்தல். எதிர்மறையாவது-பாங்கன் நினக்கிது தகாது எனத் தலைவனை இடித்துரைத்தல். தேர்தலாவது- தலைவன் சொற்படி தலைவியைச் சென்று பார்த்து வந்த பாங்கன் தலைவன் கருத்திற்கு இசைதல். கூடலாவது-தலைவன் சென்று தலைவியைக் கூடல். பாங்கிற் கூட்டலாவது-நின் உயிர்ப் பாங்கியோடு வருக எனக் கூறித் தலைவன் தலைவியை அவள் பாங்கியர்பாற் செல்லவிடுத்தல்.

பாங்கற் கூட்டத்தின் விரி:

தலைவியால் உண்டாகிய இவ்வேட்கை பாங்கனாலன்றித் தீராதென் றெண்ணித் தலைவன் பாங்கினைச் சார்தலும் பாங்கன் தலைவனது உள்ளமும் தோளும் வாடிய வேறுபாட்டைப் பார்த்து நினது இவ்வேறுபாடு ஏற்படக் காரணம் யாது வென்று கேட்டலும், இவ்வாறு கேட்டபாங்கனுக்குத் தலைமகன் தனக்கு ஏற்பட்ட வேறுபாட்டின் காரணத்தை விளம்பலும், தலைவன் கூறிய காரணத்தைக் கேட்ட கற்றறி பாங்கன் இடித்துக் கூறுதலும். பாங்கன் கூறியவற்றைக் கேட்ட தலைவன் அவனது கட்டுரையை மறுத்துக் கூறுதலும், அவ்வாறு கூறிய தலைவனைப் பாங்கன் பழித்துக் கூறுதலும், தலைவன் தன் வேட்கையின் தாங்க முடியாத நிலையைக் கூறுதலும், பாங்கன் தலைவனின் நிலையை யெண்ணித் தன்னுள்ளத்தே யிரங்குதலும், பாங்கன் தலைவன் நிலைகண்டு வருந்தி அவனோடு கூறுதலும், தலைவியைப் புணரா விடில் தலைவன் இறந்து படுவான் என்று அறிந்து, தலைவனை நோக்கி நின்னால் காணப்பட்ட தலைவி எவ்விடத்து நிற்பாள்? அவளது தன்மை யென்ன என்று பாங்கன் வினாதலும். தலைவன் தன்னாற் காணப்பட்ட தலைவி நிற்குமிடம், அவளது தன்மை ஆகியவற்றைக் கூறுதலும். நீ கூறிய குறியிடத்துச்