உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

199

சென்று தலைவியைக் கண்டு வருகிறேன் என்று தலைவனைத் தேற்றுதலும், தலைவன் கூறிய குறியிடத்துத் தலைவியைக் காணப் பாங்கன் செல்லுதலும், பாங்கன் அவ்விடத்துத் தலைவியைப் பார்த்தலும், தலைவியின் பேரழகைக் கண்டு பாங்கன் காணாமுன்னம் எந்தலைவனை அறிவின்றி இகழ்ந்தனெம் என்று இரங்கிக் கூறுதலும், தலைவியின் கண்வலையிற் சிக்கி அத்தடையோடுந் தலைவன் நம்மிடத்து வந்தது வியப்பென்று பாங்கன் அதிசயித்துக் கூறுதலும், தலைவியைப் பாங்கன் வியந்து கூறுதலும், தலைவி குறியிடத்துத் தனித்து நிற்கின்ற நிலையைக் கண்டுவந்து பாங்கன் தலைவற்குக் கூறுதலும், பாங்கன் கட்டளைப்படி தலைவன் குறியிடத்துச் செல்லுதலும், தலைவன் தலைவியைப் பார்த்தலும், தலைவியைப் புணர்ந்து மகிழ்தலும், தலைவியைப் புகழ்தலும். இனி நீ வருங்கால் நின் வருகெனத் தலைவியை நோக்கித் தலைவன் கூறுதலும், தலைவன் தலைவியை ஆயத்துச் செலுத்துதலும் ஆ கிய இருபத்தேழு துறைகளும் பாங்கற் கூட்டத்தின் விரிகளாகும்.

உயிர்ப்பாங்கியோடு

பாங்கிமதி உடன்பாடு:

மதிஉடன்பாடு: அறிவால் ஒப்புதல். பாங்கி தலைவியின் வேறுபாடு கண்டு புணர்ச்சி உண்மை அறிந்து ஆராய்ந்து தன் மதியை உடன் படுத்தல் பாங்கிமதி உடன் பாடாகும். இது முன்னுறவுணர்தல், குறையுற வுணர்தல், இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல் என மூவகைப்படும்.

பாங்கி அறத்தொடு நிற்கும் திறம்:

முன்னிலைப் புற மொழியும், முன்னிலை மொழியுமாகிய ரண்டினாலும் பாங்கி செவிலித்தாய்க்கு அறத்தொடு நிற்பாள். முன்னிலைப் புற மொழியாவது முன்னிற்பார்க்குக் கூறவேண்டு வனவற்றைப் பிறர்க்குக் கூறுவது போல் கூறுதல். முன்னிலை மொழியாவது முன்னிற்பார்க்கு நேரே கூறுதல்.

பாங்கி அறத்தொடு நிற்கும் நிலை:

செவிலித்தாய் தலைமகள் வேற்றுமைக்குக் காரணங் கேட்டவிடத்தும், செவிலித்தாய் வெறியாட்டாளனை யழைத்து மகட்கு நோய் வந்த வழியும், அது நீங்கும் வழியும் சொல்ல