உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

இளங்குமரனார் தமிழ்வளம்

4

வேண்டுமென்று கேட்ட விடத்து தெய்வம் வந்தாடும் போது பாங்கி அத் தெய்வத்தை ஆடவேண்டா என்று விலக்குதலும், அவ்வாறு வெறி விலக்கியதற்குப் பாங்கியைச் செவிலி காரணம் வினாவிய விடத்தும், பாங்கி பூத்தரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி, களிறுதரு புணர்ச்சி ஆகியவற்றால் தலைவியின் களவைச் செவிலித்தாய்க்கு வெளிப்படுத்துவாள்.

பாங்கியிற் கூட்டத்தின் விரி:

தலைவன் தன் உள்ளத்தின்கண் தலைவிமேல் கொண்ட காதலைப் பாங்கியிடங் கூறுதல். இவ்வாறு தலைவன் கூறிய தற்குப் பாங்கி குலமுறை பொருந்தாது என மறுத்துக் கூறுதல், தலைவன் தலைவியின் குலத்தை உயர்த்திக் கூறுதல். தலைவன் தலைவியிடத்துக் காதல் கொண்டது அறியாள் போன்று நீ எவளிடத்துக் காதல் கொண்டாய் எனப் பாங்கி வினாதல், தலைவன் தலைவியின் இயல்புகளை இயம்பல். தலைவி தெய்வப் பண் என்று கூறி அவளை அடைவது அருமையெனத் தலைவனுக்குத் தலைவியது அருமையைப் பாங்கி கூறுதல். தலைவன் தலைவி இன்றியமையாமை கூறல். நின் குறையை நீயே சென்று தலைவியிடங் கூறுக வெனத் தலைவனிடம் பாங்கி கூறுதல். பாங்கியைத் தலைவன் பழித்தல். தலைவி பிறர் துயரம் அறியா ளெனப் பேதைமைமைப் பாங்கி தலைவன் உளங் கொளக் கூறல், தலைவி தனக் கருளின தன்மையையும். அவளது மூதறிவுடைமையையும் தலைவன் பாங்கியிடங் கூறல். இவ்வாறு கூறக் கேட்ட பாங்கி முன் நின்வேட்கை தீர்த்தாள் என்று கூறினாயே, அவ்வாறே இன்னுங் கூடி நின் வேட்கையைத் தீர்த்துக் கொள்கவெனப் பாங்கி கூறுதல். இவ்வாறு கூறக் கேட்ட தலைவன் வேட்கை நோய் தன்னை வருத்துந் தன்மையைப் பாங்கியிடம் கூறுதல். இவ்வாறு கூறக்கேட்ட பாங்கி உலகில் வேட்கை கொண்டோர் சான்றோரை முன்னிட்டு வரைந்து கொள்வர்: அவ்வாறே நீயுந் தலைவியை வரைந்து கொள்க எனக்கூறுதல். அதனைத் தலைமகன் மறுத்தல், எங்களுடைய தமர் புனத்தை இராக்காவல் காக்க வருவர். அவர் நின்னைக் காணில் பொல்லாதவராவர் ஆகையால் நீ இப்புனம் விட்டு நீங்குக என அச்சுறுத்துக் கூறுதல், தலைவன் தான் கொண்டு வந்த தழையுங் கண்ணியுமாகிய கையுறைப் பொருளைப் புகழ்ந்து கூறுதல். பாங்கி அதனை மறுத்தல், ஆற்றாமையாகிய