உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

201

நெஞ்சினோடு தலைவன் வருந்திக் கூறுதல். இத்துணையும் ஐந்தாம் நாள் நடைபெறும் நிகழ்ச்சிகளாகும்.

மறுநாட்காலையில் வந்த தலைமகன் பாங்கியால் காரியம் நடைபெறாது என்றெண்ணி இனி நாம் மடலேறுதலே செய்ய வேண்டிய செயல் எனத் தன் உள்ளத்தில் கூறிக் கொள்ளுதல், மடலேற்றினை உலகின் மேல் வைத்துப் பாங்கிக்குக் கூறுதல், அம்மடலேற்றினைத் தலைவன் தன்மேல் வைத்துக் கூறுதல். இவ்வாறு கூறக் கேட்ட பாங்கி கிழி தீட்டிய பிறகல்லவா மடலேறுவது, ஆகையால் எம்முடைய தலைவியது உறுப்புக்கள் தீட்டுதற்கு அருமையுடையன என்று கூறுதல். இவ்வாறு தலைவியின் உறுப்புக்கள் எழுதுவது அரிதென்று கூறிய பாங்கியை நோக்கி, யான் தலைவியின் உறுப்புகளை எழுதவல்லேன் என்று தலைவன் தன்னைத் தானே புகழ்ந்து கூறுதல். அவ்வாறு தலைவன் கூறக்கேட்ட பாங்கி மடலேறத் தகாது என அருண்முறைமை கூறுதல். தலைவன் உயிரைத் தாங்கிக் கொண்டு நிற்கும் நிலைமையாகிய மொழியைப் பாங்கி கூறுதல்.

தலைவி காம இன்பம் நுகர்தற்குரிய பருவம் உடையள் அல்லள் எனத் தலைவியது இளமைத்தன்மையைப் பாங்கி தலைவற்குக் கூறுதல், தலைவிதன்னைத் துன்புறுத்திய திறத்தைப் பாங்கிக்குத் தலைவன் கூறுதல். தலைவியின் காலப்பருவத்தின் அருமையைப் பாங்கி கூறுதல், இவ்வாறு கூறக் கேட்ட தலைவன் மலையகத்து யான் வந்த தன்மையைக் கூறுவாயானால் அவர் யாவரென்று கூறாது நின்னைத் தழுவிக் கொள்வாள் எனத் தலைவியின் செவ்வியெளிமையைப் பாங்கிக் கூறுதல். நீவிர் இருவரும் ஒத்து என்னை மறைத்தபின் இக்களவொழுக்கம் ஒழுகுதற்கு எளிதென நகையாடிக் கூறுதல். பாங்கி நகையாடிக் கூறுதல் பொறாமல் தலைவன் புலந்து கூறுதல். இவ்வாறு வருந்திக் கூறிய தலைவனைப் பாங்கி தேற்றுதல். தலைவன் கொடுத்த தழையுங் கண்ணியுமாகிய கையுறைப் பொருளைப் பாங்கி ஏற்றுக் கொள்ளுதல். பாங்கி கையுறையேற்ற பின்பு தலைவன் துன்பம் நீங்கிக் கூறுதல்.

தலைவனது துன்பத்தைப் போக்க ஒப்புக் கொண்ட பாங்கி தலைவியிடத்துத் தலைவனது குறையை யுணர்த்தல். பாங்கி இவ்வுரை கூறவே தலைவிதான் கேட்டு அறியாள்போல மனத்திற் கருதாதவேறொன்றைக் கருதிக் கூறுதல். தலைவியின் நினைவாக வந்தவனைக் கண்டதைப் பாங்கி தலைவிக்குக்