உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

இளங்குமரனார் தமிழ்வளம் 4

கூறுதல். தன் களவொழுக்கத்தைப் பாங்கியிடம் தலைவி மறைத்தல். இவ்வாறு மறைத்துக் கூறிய தலைவியை உனக்கு நான் வேறோ என்று உவகையாய்த் தழுவிக் கொண்டு கூறுதல். பாங்கி தலைவன் தந்த கையுறையைப் புகழ்ந்து கூறுதல்.

என்னால்

தலைவன் வேட்கையால் கொண்ட துன்பநிலையைத் தலைவிக்குப் பாங்கி கூறுதல். இவ்வாறு பாங்கி கூறியதற்குத் தலைவி விடை கூறாததால் கூறாததால் இனி அவர் வரின் மறுத்தற்கு இயலாதெனப் பாங்கி பொருத்திக் கூறுதல். தலைவன் எண்ணமும், குறிப்பும் நம்மிடம் இரப்பவன் போற் காணப்படவில்லை, வேறு எண்ணமுடையவனாகத் தோன்றியதென்று கூறுதல். தோழி தலைவியைச் சினத்தல். தலைவி பாங்கியைச் சினத்தல். இறுதியாகத் தலைவி பாங்கி கையிலுள்ள தலைவனது கையுறையை ஏற்றுக் கொள்ளுதல்.

தலைவி தலைவன் தந்த கையுறைப் பொருளாகிய மாந் தழையை ஏற்றுக் கொண்டதைத் தலைவனுக்குக் கூறுதல். பாங்கி தலைமகனுக்குக் குறியிடங் கூறுதல். பாங்கி தலைவியைக் குறி யிடத்துக் கொண்டு போதல். பாங்கி தலைமகளைக் குறி யிடத்துய்த்து நீங்குதல், தலைவி தலைவனிடத்து எதிர்ப்படுதல். புணர்ந்து மகிழ்தல். புணர்ச்சிக்குப்பின் தலைவன் தலைவியைப் புகழ்தல். தலைமகன் தலைமகளை தோழியர் கூட்டத்திற் செல்ல விடுத்தல். தலைவியைக் குறியிடத்து நிறுத்திப் போயின பாங்கி தலைவன் போயின பின்புதான் கையுறைக்குப் போயின பாவனை யாய்க் கையுறை கொண்டுவந்து காட்டல். தலைவியைப் பாங்கியிற் கூட்டல். தலைமகளை ஆயக் கூட்டத்தில் சேர்த்து விட்டு மறு படியும் திரும்பி வந்து தலைமகன் தலைவியை மறவாமை வேண்டுமென்று தலைவனிடம் பாங்கி கூறுதல். உறவினர் அயலூரிலிருந்து வந்தால் அவர்க்கு உணவு கொடுத்து ஓம்புவது உலகியல்பாகும். அவ்வுலகியல் முறைப்படி தலைமகனை எம்மூர்க்கு வந்து இருந்து போங்கள் எனப் பகற் குறியைப் பாங்கி விலக்குதல். அவ்வுணவினைத் தலைவன் விரும்புதல் ஆகிய அறுபத்தொரு கிளவிகளும் பாங்கியிற் கூட்டத்தின் விரிகளாகும்.

பாங்கியிற் கூட்டம் :

பாங்கி கூட்டி வைக்கத் தலைவன் தலைவியைக் கூடுதல் பாங்கியிற் கூட்டமாகும். இக்கூட்டம் இரந்து பின்னிற்றல், சேட் படை, மடற்கூற்று, மடல்விலக்கு, உடன்படல், மடற் கூற்றொழி