உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள்

203

தல், குறை நயப்பித்தல், நயத்தல், கூட்டல், கூடல், ஆயங்கூட்டல், வேட்டல் எனப் பன்னிரண்டு வகைப்படும்.

-

-

-

இரந்து பின்னிற்றல் தலைவன் பாங்கியினிடத்துத் தன் குறையைத் தீர்க்க வேண்டும் என இதமாகச் சொல்லுதல். சேட் படை-பாங்கி தலைவன் குறையைத் தீர்க்க உடன்பட மறுத்தல். மடற்கூற்று-தலைவன் மடல் ஏறுவல் எனக் கூறுதல். மடல் விலக்கு - பாங்கி, அவன் மடலேறுதலை விலக்கல். உடன்படல் பாங்கி தவைனது குறையை முடிக்க நேர்தல். மடற்கூற் றொழிதல் தலைவனது குறையைத் தீர்க்கப் பாங்கி உடன்பட்டமையின் தலைவன் ‘நான்மடலேறுவல்' என்று கூறியபடி மடலேறாமல் அதனை விடுத்தல். குறை நயப்பித்தல் - பாங்கி தலைவனது குறையை முடித்தற்குத் தலைவியை விரும்புவித்தல். நயத்தல் தலைவி தலைவனது குறையை முடிக்க உடன்படல். கூட்டல் - பாங்கி குறியிடத்துத் தலைவியை உய்த்தல். கூடல் - தலைவன் தலைவியைக் கூடுதல். ஆயங்கூட்டல் - பாங்கி தலைவியை அழைத்துச் சென்று பாங்கியரிடத்தில் சேர்த்தல். வேட்டல் தலைவன் பாங்கியின் சொற்படி விருந்து விரும்பல்.

பாங்கி மகிழ்ச்சி :

-

-

தோழியினது மகிழ்ச்சி. இது வரையும் நாளளவும் ஆற்றி யிருந்தமையைத் தலைவியையும் தலைவனையும் தோழிவினாவு தலாலும், மணமனைவந்த செவிலிக்குத் தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள உள்ள அன்பையும் உறவையும் அவர்களின் வாழ்க்கையின் நலத்தினையும் கூறுதலாலும் விளங்கும். பாலைக்குரிய பெரும் பொழுதும் சிறு பொழுதும்:

சிறு

இளவேனிற்காலமும், முது வேனிற்காலமும், பின்பனிக் காலமுமாகிய பெரும் பொழுதும், நண்பகலாகிய பொழுதும் பாலைத்திணைக்கு உரியனவாம்.

பாலைக் கருப் பொருள்:

தெய்வம்

கன்னி (துர்க்கை)

உயர்ந்தோர்

-

விடலை, காளை, மீளி, எயிற்றி.

குடிகள்

புள்

எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்.

புறா, பருந்து, எருவை, கழுகு