உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

இளங்குமரனார் தமிழ்வளம்

விலங்கு ஊர்

செந்நாய்

குறும்பு

4

நீர்

பூ

மரம்

உணவு

-

பறை

யாழ்

பண்

தொழில்

பிரிவுழிக்கலங்கல் :

நீரில்லாக்குழி, நீரில்லாக் கிணறு

குராஅம் பூ, மராஅம்பூ

சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாகம், மூங்கில்

வழியிற்பறித்த பொருள், பதியிற் கவர்ந்த பொருள்

துடி

பாலையாழ்

பஞ்சுரம்

போர்செய்தல், பகற்கொள்ளையிடுதல்.

புணர்ச்சிக் களத்தினின்று தலைவி பிரிந்த போது தலைவன் கலங்கிக் கூறுதல் பிரிவுழிக் கலங்கலாகும். இது மயங்கிய நிலையில் கூறுதலும், மயக்கந் தெளிந்த பிறகு கூறுதலும் என இரண்டு

வகையினையுடையது.

பிரிவுழிக்கலங்கலின் விரிவு :

தலைவி காணாததோர் அணிமைக்கண் நின்ற தலைமகன், தலைவி ஆயக்கூட்டத்தில் சேர்ந்தவுடன், அவர் குறுங் கண்ணியும் நெடுந்தோகையும் தளிரும் கொண்டு வந்து வழிபடு வாரும், குற்றேவல் செய்வாரும் பல்லாண்டு கூறுவாருமாய்ச் சூழ்ந்து நிற்க, விண்மீன் நடுவண் தண்மதியம் போல வீற்றிருக் கின்ற தலைவி தனித்து வந்து என்னைக் கூடியது என்ன மாயமோ என்று மயங்கிக் கூறுதலும், தலைவி ஆயக்கூட்டத்திற் செல்லும் போது உயிர்ப்பாங்கி முகத்தை நோக்கிச் செல்லுதல் அறிந்து,

அவ்வுயிர்ப் பாங்கியைத் தலைவன் தூதாகப் பெற்று

உயிர்வாழ்வதாகக் கூறுதலும், தலைவியின் அழகைப் பரிந்து கொண்டாடலும் தலைவியைத் தந்த பெற்றோர்களைத் தலைவன் வாழ்த்துதலும், இரவில் தலைவி தந்த வேட்கையான் உறக்கம் பெறாது இரவுக் காலத்தை நொந்து கூறுதலும் ஆகிய ஐந்தும் பிரிவுழிக் கலங்கலின் விரியாகும்.