உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவு மகிழ்ச்சி :

அகப்பொருள்

205

தலைமகள் தன்னைக் காணாமல் தானவளைக் காண்பதோர் டத்தின்கண் நின்ற தலைமகன் புணர்ச்சிக் களத்தினின்று பிரிந்து போகின்ற தலைமகளது தன்மையைக் கண்டு மகிழ்தல் பிரிவு மகிழ்ச்சியாகும். இது தன்னெஞ்சொடு கூறுதல், பாகனொடு கூறுதல் என்னும் இரண்டு பாகுபாட்டினையுடையதாம்.

பிரிவுடன்படாமை

உடன்பட மறுத்தல்

தலைவன் பிரிவுக்குத் தலைவி தலைவி உடன்பட பிரிவுடன்படாமையாகும்.

பிரிவறிவுறுத்தல் :

தலைவன் ஓதல், காவல், தூது, துணை, பொருள் ஆகியவை காரணமாகப் பிரியவிருத்தலைத் தோழி தலைவிக்கு உணர்த்தல் பிரிவறிவுறுத்தலாகும்.

பிரிவுடன் படுதல் :

தலைவன் பிரிவுக்குத் தலைவி உடன்படுதல் பிரிவுடன்

படுதலாகும்.

)

பிரிவுடன் படுத்தல் :

தோழி தலைவன் பிரிவுக்குத் தலைவியை உடன்படச் செய் தல் பிரிவுடன் படுத்தலாகும்.

பிரிவுழிக்கலங்கல் :

தலைவன் பிரிந்தவிடத்துத் தலைவி வருந்துதல் பிரிவுழிக் கலங்கலாகும்.

பின்பனிக்காலத்தின் தன்மை :

L

மாசி, பங்குனி ஆகிய இருமாதங்களும் பின்பனிக்கால மாகும். இக்காலத்து உலவைக்காற்று வீசும். பல பறவை இனமும் கானக் கோழியும் மகிழும். கோங்கும் இலவமும் பூக்கும், பேரீந்துபனை பழுக்கும். பருத்தி வெடிக்கும். இவையே பின்பனிக் காலத்தின் தன்மைகளாகும்.

புனல்தருபுணர்ச்சி :

இது பாங்கி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் முறைகளுள் ஒன்று. நின்மகளும் யாமும் ஆற்றில் நீராடினோம். அப்போது ஒரு சுழி வந்து தலைமகளை அமுக்கி இழுத்துச் சென்றது.