உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

இளங்குமரனார் தமிழ்வளம்

4

அவ்வழியே வந்ததலைவன் அவளை எடுத்து வந்தான். அன்று முதல் அவள் அவனையே எண்ணி உடல் மெலிகிறாள் என்று தலைவியின் களவொழுக்கத்தைச் செவிலித் தாய்க்குப் பாங்கி அறிவித்தல்.

புகழ்தல் :

து உடன் போக்கின் வகைகளுள் ஒன்று. தலைவன் தலை வியை உவந்து கூறுதல்.

பூத்தரு புணர்ச்சி :

இது செவிலித்தாய்க்குத் தோழி தலைவியின் களவொழுக் கத்தை வெளிப்படுத்தும் முறைகளுள் ஒன்று. யாம் சோலையில் விளையாடிய காலத்து அவ்வழியே வந்ததலைவன் ஒரு பூவைத் தலைவியிடத்துக் கொடுத்து அணிந்து கொள்கவென்று கூறினான். தலைவியும் அதனைப் பெற்றுக் கொண்டாள். அன்று முதல் அவள் அவன் நினைவாகவே இருக்கிறாள் என்று பாங்கி தலைவியின் களவொழுக்கத்தைச் செவிலிக்குப் புலப்படுத்துதல். பெருந்திணை :

தலைமகனுக்கே உரிய மடலேறுதலும், வயது முதிர்ந்த தலைமகன் வயதில் இளையவளாகிய தலைமகளிடத்து இன்பந் துய்த்தலும், வயது முதிர்ந்த தலைமகள் வயதில் இளைய தலை மகனிடத்து இன்பந்துய்த்தலும், தலைமகனும் தலைமகளும் இளமை நீங்கி முதுமையுற்ற காலத்தும் அறத்தின் மேல் மனம் செல்லாது காமத்தின் வயப்பட்டு நிற்றலும், ஐந்திணையாகிய ஒத்த காமத்தின் மாறுபட்டுவரும் நிகழ்ச்சியும் பெருந்திணை எனப்படும்.

பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு :

இன்ப நலத்தினை வெறுத்தல், துன்பத்தின் கண்ணே புலம்புதல்; உருவெளிப்பாடு கண்டு வருந்துதல்; குற்றம் ஆராய்தல்; பசியால் வருந்தி நிற்றல்; பசலை பரவுதல்; உணவு சுருங்குதல்; உண்ணாமையால் உடல் இளைத்தல்; உறங்காமை; கனவை நனவெனமயங்குதல்; தலைவன் கூற்றைப் பொய்யாகக் கொள்ளுதல்; உரைத்த மாற்றத்தை மெய்யே என்று கூறுதல்; தலைவன் குறிப்புகண்டு ஐயப்படுதல்; தலைவன் உறவினரைக் கண்டவிடத்து மகிழ்தல்; அறத்தினை அழித்துக் கூறுமிடத்து நெஞ்சழிந்து கூறுதல்; எவ்வுடம்பாயினுந் தன்னோடு ஒப்புமை கொள்ளுதல்; தலைமகனொடு ஒப்பாகும் என்று மற்றொன்றைக்