உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

4 இளங்குமரனார் தமிழ்வளம்

போக்கறிவுறுத்தல் : (ஆ)

து உடன்போக்கின் வகைகளுள் ஒன்று. தலைவியை உடன் அழைத்துச் செல்லுமாறு தலைவனுக்குத் தோழி கூறுதல்.

போக்கல் :

இது உடன் போக்கின் வகைகளுள் ஒன்று. தலைவனுடன் தலைவியைப் பாங்கி செல்லவிடல்.

போக்குடன் படுத்தல் :

இது உடன் போக்கின் வகைகளுள் ஒன்று உடன் கொண்டு செல்லுதலன்றித் தலைவிக்கு வேறு அடைக்கலம் இன்மையைத் தலைவனுக்கும், கற்பின் மேன்மையைத் தலைவிக்குங் கூறி அவ்விருவரையும் உடன்போக்கிற்கு உடன்படுமாறு செய்தல். போக்குடன் படாமை

இது உடன்போக்கின் வகைகளுள் ஒன்று. தோழி தலைவியை உடன் அழைத்துப் போகுமாறு கூறியதைத் தலைவனும் தலைவியும் மறுத்தல்.

மருதக் கருப்பொருள் :

தெய்வம் உயர்ந்தோர்

குடிகள்

-

இந்திரன்

-

புள்

விலங்கு

ஊர்

நீர்

பூ

மரம்

உணவு

பறை

யாழ் பண்

தொழில்

ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி.

உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர். வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா.

எருமை, நீர்நாய்

பேரூர், மூதூர்.

யாற்றுநீர், கிணற்றுநீர், குளத்துநீர்

தாமரைப்பூ, கழுநீர்ப்பூ, குவளைப்பூ. காஞ்சி, வஞ்சி, மருதம்.

செந்நெல்லரிசி, வெண்ணெல்லரிசி.

நெல்லரிகிணை, மணமுழவு.

மருதயாழ்.

மருதப்பண்

விழாச் செய்தல், வயற்களை கட்டல், நெல் லரிதல், கடாவிடுதல், குளங்குடைதல், புதுநீராடல்.