உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய

அகப்பொருள்

மருதத்திற்குரிய பெரும்பொழுதும் சிறு பொழுதும்

209

கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக் காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என்ற அறுவகைப் பெரும் பொழுதும், வைகறை விடியல் ஆகிய

சிறுபொழுதும் மருதத்திணைக்குரியனவாம்.

மருட்கை :-

ருவகைச்

இது எண்வகை மெய்ப்பாடுகளுள் ஒன்று. புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்னும் நான்கிடத்தும் வியப்புத் தோன்றும். இவற்றுள் புதுமையாவது-எவ்விடத்திலும் எக்காலத்திலும் காணப்படாததோர் பொருளைக் கண்ட வழி வியத்தலாம். அது வானூர்தி போவது கண்டு வியத்தல் போல்வன. பெருமையாவது- முன்பு கண்ட பொருள்கள் அவ்வளவிற் பெருத்தன கண்டு வியத்தல். அவை மலையும் யானையும் செல்வமும் முன்பு கண்ட அளவைக் காட்டிலும் மிக்கன கண்டவழி வியப்புத் தோன்றும். சிறுமை யென்பது-மிகவும் நுண்ணியன கண்டு வியத்தல். அது கடுகினுட் துளைபோல்வன. ஆக்கமென்பது-ஒன்றன் வேறுபாடு (பரிணாமம்) கண்டு வியத்தல். அது இளையான் வீரங்கண்டு வியத்தல் போன்றது.

மகிழ்ச்சி :

இது மீட்சியின் வகைகளுள் ஒன்று. தலைவிக்கு முன் செல்கின்றவர்கள் தலைவியின் வரவைப் பாங்கியர்க்குக் கூறப் பாங்கியர் மகிழ்தலும், பாங்கியர் நற்றாய்க்குக் கூற நற்றாய் மகிழ்தலுமாம்.

மாரன் அம்பால்வரும் துயர்

சொல்லும் நினைவுமாதல், வெய்துயிர்த்து இரங்கல், மோகம், இறப்பு என்பவை மாரன் அம்பால்வரும் துயராம். முதற்பொருளின் வகை

நிலம் பொழுது ஆகிய இரண்டும் முதற் பொருளின் வகை களாகும்.

முதுவேனிற்காலத்தன்மை :

ஆனி, ஆடி ஆகிய இருதிங்களும் முதுவேனிற்காலமாகும். க்காலத்தில் தூசெழும்படி கோடைக் காற்று வீசும். கானல் தோன்றும். காடை, வானம்படி, காகம், கவுதாரி ஆகியவை வ மகிழும். மல்லிகை, புளி, பாதிரி ஆகியவை பூக்கும். பாலை,