உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இளங்குமரனார் தமிழ்வளம்

4

அம்ம வாழி தோழி - இதில், “ஒன்று சொல்வேன் கேள்” என்னும் ஏவற் பொருளதாய் வந்தது.

“அம்ம உரையசை கேண்மின்என் றாகும்"

அம்மின் இறுதி திரிதல் :

நன். 438

அம்மின் இறுதியாகிய மகர மெய் கசதபக்கள் வருமொழியாக வந்த காலத்துத் தன் வடிவு திரிந்து ங நக்களாகும்.

(எ.டு) புளியங்கோடு, புளியஞ்செதில், புளியந்தோல் அல்வழிப் புணர்ச்சி :

வேற்றுமை அல்லாத வழிப் புணர்வது அல்வழிப் புணர்ச்சியாகும். அதுவினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை என்னும் ஐந்து தொகை நிலைத் தொடரும், எழுவாய்த் தொடர், விளித் தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், இடைச் சொற்றொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத் தொடர் என்னும் ஒன்பது தொகாநிலைத் தொடர்களுமாகப் பதினான்கு வகைப்படும்.

(எ.டு)

தொகை நிலைத் தொடர்கள் :

கொல்யானை

கருங்குதிரை

வினைத்தொகை

பண்புத் தொகை

இருபெயரொட்டுப் பண்புத் தொகை

உவமைத் தொகை

பனைமரம்

மதிமுகம்

கபிலபரணர்

கருங்குழல்

தொகா நிலைத் தொடர்:

வளவன் வந்தான்

முருகா வா

வந்தாள் கோதை

│││

உம்மைத் தொகை

அன்மொழித் தொகை

எழுவாய்த் தொடர்

விளித்தொடர்

தெரிநிலை வினைமுற்றுத் தொடர்