உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ்வளம்

4

அளவு கடந்து ஒலிக்கும் எழுத்துக்கள் :

இசைத்தலும், அழைத்தலும், பண்ட மாற்றுதலுமாகிய விடத்து உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் தமக்குச் சொல்லிய அளவைக் கடந்து ஒலிக்கும்.

அஃகிய இ :

குறுமை + இயல் + இகரம்

=

குற்றியலிகரம். இவ்விகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிற் குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும். இதன் விளக்கத்தைக் குற்றியலிகரம் என்ற தலைப்பில்

காண்க.

அஃகிய உ :

குற்றியலுகரம். குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம். ஓசை குறுகி ஒலிக்கும் உகரம் குற்றியலுகரமாகும். இது தனக்குரிய ஒரு மாத்திரையிற் குறைந்து அரை மாத்திரையாய் ஒலிக்கும். இது ஆறு வகைப்படும். வகைப்படும். இதன் விளக்கத்தைக் குற்றியலுகரம் என்ற தலைப்பில் காண்க.

அஃகிய ஐ :

ஐகாரக் குறுக்கம். அஃகுதல் = குறைதல். ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிற் குறைந்து ஒலிக்குமிடத்து ஐகாரக் குறுக்கம் எனப் பெயர் பெறும். இதன் விளக்கத்தை ஐகாரக் குறுக்கம் என்னுந் தலைப்பில் காண்க.

அஃகிய ஔ :

ஒளகாரக் குறுக்கம். ஒளகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிற் குறைந்து ஒலிக்குமிடத்து ஔகாரக் குறுக்கம் எனப் பெயர் பெறும். இதன் விளக்கத்தை ஔகாரக் குறுக்கம் என்னுந் தலைப்பில் காண்க.

அஃகிய தனி நிலை :

ஆய்தக் குறுக்கம். ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையிற் குறைந்து கால் மாத்திரையாய் ஒலிக்குமிடத்து ஆய்தக் குறுக்கம் எனப் பெயர் பெறும். இதன் விளக்கத்தை ஆய்தக் குறுக்கம் என்னுந் தலைப்பில் காண்க.

அஃகிய மஃகான் :

மகரக் குறுக்கம். மகரம் தனக்குரிய அரை மாத்திரையிற் குறைந்து கால் மாத்திரையாய் ஒலிக்குமிடத்து மகரக் குறுக்கம்