உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

11

எனப் பெயர் பெறும். இதன் விளக்கத்தை மகரம் குறுக்கம் என்னுந் தலைப்பில் காண்க.

அஃகேனம் :

உயிர் எழுத்து வரிசையின் இறுதியில் வரும் புள்ளி வடிவான எழுத்து அஃகேனம் ஆய்தம் என்பதும் அது (ஃ). அஃறிணையிற் பாற் பொதுப் பெயர் :

து து என்னும் ஒருமை விகுதியையாயினும் வை, அ, கள் என்னும் பன்மை குதிகளையாயினும் பெறாது வரும் அஃறிணைப் பெயர்களெல்லாம், அத்திணை ஒன்று பல என்னும் இருபாற்கும் பொதுப் பெயர்களாம். இவை பால் பகா அஃறிணைப் பெயர்கள் எனவும், அஃறிணையியல் பெயர் எனவுங் கூறப்படும்.

6

(எ-டு) U யானை வந்தது யானை வந்தன

மரம் வளர்ந்தது

மரம் வளர்ந்தன

கண் சிவந்தது கண் சிவந்தன

அஃறிணை ஒன்றன் பாற் படர்க்கைப் பெயர்கள் :

துவ் விகுதியை இறுதியிலுடைய பெயர்கள் அஃறிணை ஒன்றன் பாற்படர்க்கைப் பெயர்களாகும்.

(எ.டு) குழையது; கோட்டது.

ஆகாரத்தின் முன் வல்லினம் புணர்தல் :

அல்வழிப் புணர்ச்சியில் ஆ என்னும் பெயர்க்கும், மா என்னும் பெயர்க்கும், மியா என்னும் முன்னிலையசை இடைச் சொல்லுக்கும், ஆகார வீற்று எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்றுக்கும், காட்டுப் பசு என்னும் பொருளைத் தரும் ஆமா என்பதற்கும் ஆகார வீற்றை இறுதியாகவுடைய ய வினையாலணையும் பெயர்க்கும் முன் வருகின்ற

வல்லினம் இயல்பாகும்.

(எ.டு) ஆ குறிது, மா சிறிது ஆ, மா முன் வல்லினம் இயல்பாயிற்று.

ஆமா பெரிது ஆமா முன் வல்லினம் இயல்பாயிற்று.