உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

66

புறப்பொருள்

"முன்புறம் தான்காணும் இவ்வுலகை இவ்வுலகில் தன்புறம் கண்டறிவார் தாமில்லை-அன்பின் அழுதார்கண் நீர்விடுத்த ஆறாடிக் கூகை கழுதார்த் திரவழங்கும் காடு.'

காட்சி: -(அ)

253

காட்சியாவது போர்க்களத்து இறந்துபட்ட வீரர்களின் நினைவுக்குறியாகக் கல் நிறுத்தற் பொருட்டு, அதற்குரிய கல்லைக் காண்பது காட்சியாகும்.

(எ.டு)

“தாழி கவிப்பத் தவஞ்செய்வர் மண்ணாக வாழிய நோற்றானை மால்வரை-யாழிசூழ் மண்டல மாற்றா மறப்புகழோன் சீர்பொறிப்பக் கண்டென னின்மாட்டோர் கல்’

காட்சி: (ஆ)

வேலேந்திய தலைவன் பூம் பொழிலிடத்தே காமஞ்சாலா இளமையோள் ஒருதலைவியைக் கண்டு விரும்பியது காட்சி என்னும் துறையாம்.

(எ.டு)

“கருந்தடங்கண் வண்டாகச் செவ்வாய் தளிரா

அரும்பிவர் மென்முலை தொத்தாப்-பெரும்பணைத் தோட்

பெண்தகைப் பொலிந்த பூங்கொடி

கண்டேம் காண்டலும் களித்தஎம் கண்ணே."

காரணமுந்துறூஉங் காரிய நிலை:

காரணத்திற்கு முன்னர்க் காரியம் நிகழ்வது காரண

முந்துறூ உங் காரிய நிலையாகும்.

(எ.டு)

“தம் புரவு பூண்டோர் பிரியத் தனியிருந்த வம்புலவு கோதையர்க்கு மாரவேள்- அம்பு பொருமென்று மெல்லாகம் புண்கூர்ந்த மாலை வருமென் றிருண்ட மனம்'