உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

இளங்குமரனார் தமிழ்வளம்

காண்டல் வலித்தல்:

4

யுடைய

காமம் வருத்தலால் மெலிந்து வருந்தும் தலைவி தலைவனைக் கூடுதல் நிமித்தமாக மலை நாட்டையுடை தலைவனை இரண்டாவது முறையும் காண்பதற்கு உறுதி பூண்டது காண்டல் வலித்தல் என்னும் துறையாம்.

(எ.டு)

“வேட்டவை எய்தி விழைவொழிதல் பொய்போலும்

மீட்டு மிடை மணிப் பூணானைக்-காட்டென்று

மாமை பொன்னிறம் பசப்பத்

தூமலர் நெடுங்கண் துயில்துறந் தனவே.'

காண்டல்:

அழகிய நெற்றியையும் மூங்கிலைப் போன்ற தோளினையும் உடைய ஒருதலைவி ஒரு தலைவனைக் கண்டு காமுற்று மெலிந்தது காண்டல் என்னும் துறையாம்.

(எ.டு)

66

கடை நின்று காமம் நலியக் கலங்கி இடை நின்ற ஊரலர் தூற்றப்-புடைநின்ற எற்கண் டிலனந் நெடுந்தகை

தற்கண்ட னென்யான் கண்ட வாறே.

காதலிற் களித்தல்:

99

தலைவி, மலை நாட்டையுடைய தலைவனது மார்பினைத் தழுவி நீங்குதல் அறியாத காமத்தாலே மகிழ்ந்தது காதலிற் களித்தல் என்னும் துறையாம்

(எ.டு)

“காதல் பெருகிக் களிசெய்ய அக்களியாற் கோதையும் தாரும் இடைகுழைய-மாதர்

கலந்தாள் கலந்து கடைக் கண்ணாற் கங்குல்

புலந்தாள் புலரியம் போது.

காந்தள்:

முருகப் பெருமான் சூரன்பன்மாவை அழிக்கும் பொருட்டுச் சூடிய காந்தளின் சிறப்பைக் கூறியது காந்தள் என்னும் துறையாம்.