உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

66

புறப்பொருள்

குருகு பெயரிய குன்றெறிந் தானும்

உருகெழு காந்தள் மலைந்தான்-பொருகழல்

கார்கருதி வார்முரசம் ஆர்க்கும் கடற்றானைப் போர்கருதி யார்மலையார் பூ.

கார்முல்லை:

255

பகைவரால் வெல்லுதற்கரிய வலிமை பொருந்திய பாசறை

யிடத்தாராகிய நம் தலைவர்

வினைமுடிந்து வருவதற்கு

முன்னரே முகில் நீரை முகந்து கொண்டு வந்தது என்று கூறுவது கார்முல்லை என்னும் துறையாம்.

(எ.டு)

"புனையும் பொலம்படைப் பொங்குளைமான் திண்தேர்

துனையும் துனைபடைத் துன்னார்-முனையுள்

அடல்முகந்த தானை யவர்வாரா முன்னம் கடல்முகந்து வந்தன்று கார்.'

கால்கோள்:

கால்கோளாவது. நடுகல் நடுவதற்குரிய இடத்தைத் தேர்ந் தெடுத்து அக்கல்லை நடுவதற்குரிய அடிப் படையை நன்நாளில் அமைப்பதாம்.

(எ.டு)

66

'காப்புநூல் யாத்துக் கடிகமழ் நீராட்டிப் பூப்பலி பெய்து புகைகொளீஇ- மீப்படர்ந்த காளை நடுகற் சிறப்பயர்ந்து கால்கொண்மி னாளை வரக்கடவ நாள்

காவல்முல்லை: (அ)

ஒரு மன்னனுக்குக் காவல் தொழிலின் இயல்பைப் பிறர் எடுத்துக் கூறுதல் காவல் முல்லை என்னும் துறையாம்

(எ.டு)

“ஊறின் றுவகையுள் வைக உயிரோம்பி

ஆறிலொன் றானா தளித்துண்டு- மாறின்றி