உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

இளங்குமரனார் தமிழ்வளம்

4

வான்காவல் கொண்டான் வழிநின்று வைகலும் தான்காவல் கொண்டல் தகும்.”

காவல் முல்லை: (ஆ)

99

கடல் சூழ் கண்ணகல் ஞாலத்தின்கண் வேந்தனது காவல் மிகுதியைக் கூறியதும் காவல் முல்லை என்னுந் துறையாம்.

(61.6)

“பெரும் பூண் சிறுதகைப் பெய்ம்மலர்ப் பைந்தார்க்

கருங்கழல் வெண்குடையான் காவல்-விரும்பான் ஒருநாள் மடியின் உலகின்மேல் நில்லாது

இருநாள் வகையார் இயல்பு.

கிணை நிலை: (அ)

செல்வம் பெருகும் அரண்மனையிடத்தே தடாரிப் பறை கொட்டுபவன் தான் பெற்ற வளத்தைக் கூறியது கிணை நிலை என்னுந் துறையாம்.

(எ.டு)

“வெள்ளி முளைத்த விடியல் வயல்யாமை அள்ளகட் டன்ன அரிக்கிணை-வள்ளியோன் முன்கடை தட்டிப் பகடுவாழ் கென்னாமுன் என்கடை நீங்கிற் றிடர்.”

கிணைநிலை: (ஆ)

கிணைப் பறையைக் கொட்டுபவன் வேளாளனுடை டைய புகழைச் சொல்லியதும் கிணை நிலை என்னுந் துறையாம்.

(எ.டு)

“பகடுவாழ் கென்று பனிவயலுள் ஆமை அகடுபோல் அங்கண் தடாரித்-துகடுடைத்துக் குன்றுபோற் போர்விற் குரிசில் வளம்பாட இன்றுபோம் எங்கட் கிடர்.’

குடி நிலை:

وو

கரந்தை மறவர்தம் குடியினது வரலாற்றைப் புகழ்ந்து கூறியது குடிநிலை என்னும் துறையாம்