உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(6.6)

புறப்பொருள்

“பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர்-கையகலக்

கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி.

وو

குடுமிகளைந்த புதழ்சாற்று நிலை:

257

நிரைத்த மாலையையுடைய வேந்தன் தன் பகைவருடைய நெடிய அரணை அழித்து அவரது முடியைக் களைந்தமையைப் புகழ்ந்து கூறியது குடுமிகளைந்த புகழ்சாற்று நிலை என்னும் துறையாம்.

(எ.டு)

“பூந்தா மரையிற் பொடித்துப் புகல்விசும்பின் வேந்தனை வென்றான் விறல்முருகன்- ஏந்தும் நெடுமதில் கொண்டு நிலமிசையோர் ஏத்தக் குடுமி களைந்தான்எங் கோ.'

குடை செலவு:

99

காஞ்சி மன்னன் போர் வீரர்கள் முற்படச் சூழ்ந்து செல்ல தனது குடையை நல்ல நாளில் புறவீடு விட்டது குடை செலவு என்னுந் துறையாம்.

(எ.டு)

“தெம்முனை தேயத் திறல்விளங்கு தேர்த்தானை

வெம்முனை வெற்றி விறல்வெய்யோன்- தம்முனை நாட்டிப் பொறிசெறித்து நண்ணார் மேற்சென்று கூடி நாட் கொண்டான் குடை'

குடைமுல்லை:

மிகுந்த வலிமை பொருந்திய மன்னனது குடையைப் புகழ்ந் தது குடைமுல்லை என்னும் துறையாம்.

(எ.டு)

"வேயுள் விசும்பு விளங்கு கதிர்வட்டம்

தாய புகழான் தனிக்குடைக்குத்-தோயம்